For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பஞ்சாயத்தை கூட்டுங்கப்பா.. சானியா மிர்சா குழந்தைக்கு பாகிஸ்தான் குடியுரிமை இல்லையாம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நல்ல செய்தி வந்த அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் இந்த குழந்தைக்கு இந்திய குடியுரிமை கிடைக்குமா அல்லது பாகிஸ்தான் குடியுரிமை கிடைக்குமா என்ற தேவையற்ற விவாதங்கள் கிளம்பின.

தற்போது, பாகிஸ்தான் இணையதளம் (துன்யாநியூஸ்) ஒன்றில் சானியா மிர்சா குழந்தைக்கு பாகிஸ்தான் குடியுரிமை கிடைக்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை

ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை

ஷோயப் மாலிக் - சானியா மிர்சா இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அப்போதிருந்தே, இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளைச் சேர்ந்த நெட்டிசன்கள் இவர்களுக்கு எதிராகவும், ஆதரவாகவும் குரல் எழுப்பி வருகின்றனர்.

குடியுரிமை குழப்பம்

குடியுரிமை குழப்பம்

சானியா மிர்சா கருவுற்றதை அறிவித்த நாளில் இருந்ததே குழந்தையின் குடியுரிமை பற்றிய பேச்சுக்கள் கிளம்பின. அப்போது ஷோயப் மாலிக், "எந்த நாட்டு குடியுரிமை கிடைக்கும் என்பது முக்கியமல்ல. என் குழந்தை பாகிஸ்தானியும் இல்லை, இந்தியனும் இல்லை" என கூறி இருந்தார்.

பாக். குடியுரிமை கிடைக்காது

பாக். குடியுரிமை கிடைக்காது

தற்போது வந்துள்ள இணையதள செய்தியில், பாகிஸ்தானின் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியானது சானிய மிர்சாவின் குழந்தைக்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்கப்படாது என கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரட்டை குடியுரிமை ஒப்பந்தம்

இரட்டை குடியுரிமை ஒப்பந்தம்

அதற்கு காரணம், பாகிஸ்தான் இந்தியாவோடு இரட்டை குடியுரிமை ஒப்பந்தம் போடவில்லை. சானியா மிர்சா இன்னும் இந்திய குடியுரிமையோடு தான் இருக்கிறார். அதனால், அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு பாகிஸ்தான் குடியுரிமை கிடைக்காது என கூறப்பட்டுள்ளது. குழந்தை தற்போது இந்தியாவில் ஹைதராபாத் நகரில் பிறந்துள்ளது. எனவே, இந்திய குடியுரிமை கிடைக்குமா என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

இணையத்தில் பஞ்சாயத்து

இணையத்தில் பஞ்சாயத்து

ஏற்கனவே, இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த இணையதளவாசிகள் மாலிக் - சானியா மிர்சா தம்பதி பற்றிய பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது பாகிஸ்தான் குடியுரிமை கிடைக்காது என்ற செய்தி வந்துள்ளதால், இன்னும் என்னென்ன பஞ்சாயத்தில் எல்லாம் ஈடுபட போகிறார்களோ தெரியவில்லை.

Story first published: Friday, November 2, 2018, 12:31 [IST]
Other articles published on Nov 2, 2018
English summary
Shoaib Malik - Sania Mirza baby will not be a Pakistani Citizen says news report
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X