For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

5 மாசமா இந்தியாவில் இருக்கும் குடும்பத்தை பார்க்கலை.. சிறப்பு அனுமதி வாங்கிய பாக். கிரிக்கெட் வீரர்!

இஸ்லாமாபாத் : இந்தியாவில் இருக்கும் தன் மனைவி, குழந்தையை கடந்த ஐந்து மாதமாக பார்க்க முடியாமல் தவித்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தற்போது சிறப்பு அனுமதி பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் அணி இந்த மாத இறுதியில் இங்கிலாந்து செல்ல உள்ளது. அப்போது தனக்கு மட்டும் இந்தியா சென்று, பின் இங்கிலாந்து செல்ல அனுமதி பெற்றுள்ளார் சோயப் மாலிக்.

தடையை நீக்குங்க எசமான்.. கோச் வேலை செஞ்சாவது பொழச்சுக்குவேன்.. சலீம் மாலிக் கதறல் ! தடையை நீக்குங்க எசமான்.. கோச் வேலை செஞ்சாவது பொழச்சுக்குவேன்.. சலீம் மாலிக் கதறல் !

லாக்டவுன்

லாக்டவுன்

சோயப் மாலிக் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது பாகிஸ்தானில் இருந்தார். அப்போது இந்தியா வர விசா மறுக்கப்பட்டது. விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. அதனால், அவரால் இந்தியா வரமுடியவில்லை.

இந்தியாவில் சானியா மிர்சா

இந்தியாவில் சானியா மிர்சா

அவரது மனைவி சானியா மிர்சா மற்றும் ஒரு வயது மகன் இஷான் இந்தியாவில் ஹைதராபாத் நகரில் தங்கி இருந்தனர். அவர்களும் லாக்டவுன் காரணமாக எங்கும் செல்ல முடியாத நிலை. சானியா மிர்சா சரியாக இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கும் முன் தான் டென்னிஸ் தொடரில் ஆடிவிட்டு இந்தியா வந்து சேர்ந்தார்.

விமான சேவைகள்

விமான சேவைகள்

அதனால், சோயப் மாலிக் தன் குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் கடந்த ஐந்து மாதங்களாக தவித்து வந்தார். தற்போது இந்தியாவில் விமான சேவைகள் மீண்டும் துவங்கி உள்ளன. இந்த நிலையில், சோயப் மாலிக் இந்தியா வர எண்ணினார்.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. சோயப் மாலிக் உத்தேச அணியில் இடம் பெற்று பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளார். அவர் டி20 அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்து செல்லும் அணி

இங்கிலாந்து செல்லும் அணி

பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆட உள்ளது. 29 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணி ஜூன் 28 அன்று இங்கிலாந்து கிளம்ப உள்ளது. அங்கே மான்செஸ்டர் அருகே, டெர்பிஷயரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

அனுமதி

அனுமதி

டெஸ்ட் தொடரில் ஆட வாய்ப்பு இல்லாத நிலையில், சோயப் மாலிக் தான் ஐந்து மாதமாக குடும்பத்தை பார்க்கவில்லை என்பதால் தனக்கு தாமதமாக இங்கிலாந்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஒப்புதல் அளித்துள்ளது.

இங்கிலாந்து ஒப்புதல்

இங்கிலாந்து ஒப்புதல்

அதன்படி சோயப் மாலிக் ஜூலை 24 அன்று இங்கிலாந்து செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அவர் அதற்கு முன் இந்தியா வந்து தன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட உள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு இதற்கு ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.

Story first published: Saturday, June 20, 2020, 22:05 [IST]
Other articles published on Jun 20, 2020
English summary
Pakistan cricketer Shoaib Malik seeks permission from PCB to meet his wife Sania Mirza and 1 year old baby in India before England series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X