For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நரீனை சேர்ப்பீங்களா, மாட்டீங்களா... பிசிசிஐக்கு ஷாக் கொடுக்கும் ஷாருக்... ஐபிஎல் தொடரிலிருந்து விலக

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக் கான், பிசிசிஐ மீது வழக்குப் போட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 8வது ஐபிஎல் தொடரிலிந்து விலகவுநம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

உலகக் கோப்பைத் தோல்வி வேதனையிலிருந்து இந்திய ரசிகர்களை மீள வைக்க ஐபிஎல் டுவென்டி 20 தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது.

ஏப்ரல் 7ம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. இந்த நிலையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்தத் தொடரிலிருந்து விலகப் போவதாக செய்திகள் கூறுகின்றன.

சுனில் நரீன் விவகாரம்

சுனில் நரீன் விவகாரம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கியமான வீரர் சுனில் நரீன். இவருக்கு, சந்தேகப் பந்து வீச்சு காரணமாக விளையாடுவதில் சிக்கல் நிலவுகிறது.. இதனால் அவர் மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் இடம் பெறவில்லை.

எங்களுக்கு நரீன் வேணும்

எங்களுக்கு நரீன் வேணும்

ஆனால் ஐபிஎல் தொடரில் சுனில் நரீன் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஷாருக் கான் கோரி வருகிறார். ஆனால் இதை பிசிசிஐ ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

சாம்பியன்ல் லீக்கில் தடை

சாம்பியன்ல் லீக்கில் தடை

ஏற்Kனவே 2014 சாம்பியன்ஸ் லீக் தொடரிலும், பிற போட்டிகளிலும் ஆட நரீனுக்குத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் சமீபத்தில் அவர் பந்து வீசலாம் என்று அவருக்கு நடந்த பயோ மெக்கானிக்கல் சோதனைக்குப் பின்னர் ஐசிசி தெரிவித்துள்ளது.

பிசிசிஐ நிலைப்பாடு என்ன

பிசிசிஐ நிலைப்பாடு என்ன

ஆனால் அதன் பிறகு பிசிசியின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாகவில்லை. இதனால்தான் நரீனை விளையாட அனுமதிக்காவிட்டால் போட்டித் தொடரிலிருந்து விலக கேகேஆர் முடிவு செய்துள்ளதாம். மேலும் பிசிசிஐ மீது வழக்குத் தொடரவும் ஷாருக் கான் யோசித்து வருகிறாராம்.

சென்னையில் சோதனை நடத்த உத்தரவு

சென்னையில் சோதனை நடத்த உத்தரவு

இதற்கிடையே. சுனில் நரீனை சென்னையில் ஒரு சோதனைக்கு உட்படுத்த பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. அதில் அவர் பாஸ் ஆனால் ஐபிஎல் 8 தொடரில் பங்கேற்கத் தடை இல்லை என்று பிசிசிஐ கூறியுள்ளதாம்.

ஷாருக்கானுக்கு உடன்பாடில்லை

ஷாருக்கானுக்கு உடன்பாடில்லை

ஆனால் இந்த சோதனைக்கு ஷாருக் கான் எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம். நரீனை சோதனைக்குக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அவர் கூறி வருகிறார்.

இந்த விவகாரத்தால் ஐபிஎல் தொடங்கும் முன்பே சர்ச்சை வெடித்துள்ளது.

Story first published: Tuesday, March 31, 2015, 11:19 [IST]
Other articles published on Mar 31, 2015
English summary
Team India was defeated by Australia in semi-final match of ICC World Cup 2015. People in this cricket-loving country were disappointed but they soon will get rid of the shock as Indian Premier League (IPL) is all set to start from April 7.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X