ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு முடிஞ்சிது.. 3 வீரருக்கு வாய்ப்பு - ரோகித் திட்டம்.. உலககோப்பை கனவு காலி

மும்பை: இந்திய டி20 அணியிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Asia Cup 2022 தொடருக்கான இந்திய அணியில் BCCI எடுக்கும் ரிஸ்க் l *Cricket

கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக டி20 போட்டியில் 201 ரன்கள் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர், அதன் பிறகு சிறப்பான ஆட்டத்தை டி20 போட்டியில் வெளிப்படுத்தவில்லை.

கடந்த 3 டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அவர் அடித்த இலக்கு 0, 10, 24 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

3 முறை இந்தியா vs பாகிஸ்தான் மோத வாய்ப்பு.. ஆசியக்கோப்பையில் சூப்பர் சர்ஃப்ரைஸ்.. எப்படி தெரியுமா? 3 முறை இந்தியா vs பாகிஸ்தான் மோத வாய்ப்பு.. ஆசியக்கோப்பையில் சூப்பர் சர்ஃப்ரைஸ்.. எப்படி தெரியுமா?

பலவீனம்

பலவீனம்

மேலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஷாட் பந்துகளை அடிக்க தெரியவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. பலம் குன்றிய அணிக்கு எதிராக மட்டும் தான் ஸ்ரேயாஸ் அதிரடியாக ஆடுகிறார் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தும் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக கடைசி 2 டி20 போட்டியில் அவர் அணியிலிருந்த நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபக் ஹூடா

தீபக் ஹூடா

ஸ்யேராஸ் ஐயருக்கு பதில் 3வது இடத்தில் தீபக் ஹூடா களமிறக்கப்படலாம். அயர்லாந்துக்கு எதிரான தொடரில் சதம் விளாசிய தீபக் ஹுடா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் அபாரமாகவே விளையாடினார். மேலும் தீபக் ஹூடா ஒரு ஓவர் அல்லது 2 ஓவரும் வீச கூடலாம் என்பதால் உலகக் கோப்பை டி20 தொடருக்கு நல்ல தேர்வாக இருப்பார்.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளத்திற்கு ஏற்றார் போல் விளையாடும் ஷாட் திறமை ச்ஞ்சு சாம்சனுக்கு உள்ளது. மேலும் ஒருநாள் போட்டியில் கூட சாம்சன் சிறப்பாக செயல்பட்டு ரன் குவித்தார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு 4வது டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஷான் கிஷன்

இஷான் கிஷன்

இதே போன்று ரோகித் சர்மாவின் செல்லப்பிள்ளையான இஷான் கிஷன் தென்னாப்பிரிக்கா, இலங்கை தொடரில் எல்லாம் வாய்ப்பு கொடுத்து வந்த அணி நிர்வாகம் தற்போது சில போட்டிகளில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார். இதனால் கடைசி 2 டி20 போட்டியில் இஷான் கிஷனுக்கு தொடக்க வீரர் வாய்ப்பு வழங்கப்பட்டு, சூர்யகுமாருக்கு 3வது இடம் வழங்கப்படலாம்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Shreyas iyer faces axe in last 2 T20I – 3 Players might replace him ஸ்ரேயாஸ் ஐயருக்கு+ வாய்ப்பு முடிஞ்சிது.. 3 வீரருக்கு வாய்ப்பு - ரோகித் திட்டம்.. உலககோப்பை கனவு காலி
Story first published: Thursday, August 4, 2022, 23:39 [IST]
Other articles published on Aug 4, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X