For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காகிசோ ரபடா வெற்றி நாயகன்... அவரோட பர்பார்மன்ஸ் சான்சே இல்ல.. ஸ்ரேயாஸ் ஐயர் புகழ்ச்சி

துபாய் : துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல்லின் இரண்டாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

இதில் சூப்பர் ஓவரில் சிறப்பாக பந்து வீசி கே.எல் ராகுல் மற்றும் நிகோலஸ் பூரன் செயல்படாமல் 2 ரன்களில் சுருட்டினார் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பௌலர் காகிசோ ரபடா.

இந்நிலையில் அவர் அணியின் வெற்றி நாயகன் என்று டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் புகழ்ந்துள்ளார்.

 இக்கட்டான சூழ்நிலை.. ஷ்ரேயாஸ் ஐயர் எடுத்த தில்லான முடிவு.. கோலி கேப்டன்சிக்கு இப்போதே வந்த பிரச்சனை! இக்கட்டான சூழ்நிலை.. ஷ்ரேயாஸ் ஐயர் எடுத்த தில்லான முடிவு.. கோலி கேப்டன்சிக்கு இப்போதே வந்த பிரச்சனை!

157 ரன்களை எடுத்த டெல்லி கேபிடல்ஸ்

157 ரன்களை எடுத்த டெல்லி கேபிடல்ஸ்

ஐபிஎல்லின் இரண்டாவது போட்டி நேற்று துபாயில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் 8 விக்கெட்டுகளில் 157 ரன்களை குவித்தது. அணியின் வீரர்கள் முதலில் தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக விளையாடி ரன்களை உயர்த்தினர்.

வெற்றி பெற்ற டெல்லி கேபிடல்ஸ்

வெற்றி பெற்ற டெல்லி கேபிடல்ஸ்

இதையத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி 60 பந்துகளில் 89 ரன்கள் அடித்தும் அணியால் வெற்றியை கைகொள்ள முடியவில்லை. மாறாக சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் காகிசோ ரபடா சிறப்பாக பந்துவீசி கே.எல் ராகுல் மற்றும் நிகோலஸ் பூரன் கூட்டணியை 2 ரன்களில் சுருட்டினார். இதனால் வெற்றி டெல்லி கேபிடல்ஸ் வசமானது.

வெற்றி நாயகன் ரபடா

வெற்றி நாயகன் ரபடா

இந்நிலையில், இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ், காகிசோ ரபடா வெற்றி நாயகன் என்று புகழ்ந்துள்ளார். வித்தியாசமான கோணங்களில் போட்டி சென்றதை சுட்டிக் காட்டியுள்ள ஐயர், கடந்த சீசன்களிலும் இதை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார். ரபடாவின் சிறப்பான பௌலிங்கால் மட்டுமே தங்களால் வெற்றியை பெற முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரவிசந்திரன் அஸ்வின் காயம்

ரவிசந்திரன் அஸ்வின் காயம்

மேலும் ஸ்டாய்னிசின் சிறப்பான ஆட்டத்தையும் அவர் புகழ்ந்துள்ளார். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வினின் காயம் குறித்தும் பேசிய ஐயர், அவர் அடுத்த போட்டிக்கு தான் தயாராகிவிடுவேன் என்று தெரிவித்தது குறித்து கூறினார். ஆயினும் மருத்துவ குழுவினரே இதில் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Story first published: Monday, September 21, 2020, 14:16 [IST]
Other articles published on Sep 21, 2020
English summary
Kagiso Rabada bowled brilliantly in the Super Over to help Delhi win
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X