இதை எதிர்பார்க்கவே இல்லையே.. வெஸ்ட் இண்டீஸுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரேயாஸ்..5வது டி20ல் 189 ரன்கள் இலக்கு

ஃப்ளோரிடா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

Recommended Video

IND vs WI 5th T20 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி *Cricket

5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3 - 1 என கைப்பற்றிவிட்ட நிலையில் கடைசி போட்டி இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்பட்டார்.

கேப்டன் பதவியேற்ற ஹர்திக் பாண்ட்யா.. 5வது டி20 போட்டியில் ரசிகர்கள் அதிர்ச்சி.. இந்திய அணி பேட்டிங்!கேப்டன் பதவியேற்ற ஹர்திக் பாண்ட்யா.. 5வது டி20 போட்டியில் ரசிகர்கள் அதிர்ச்சி.. இந்திய அணி பேட்டிங்!

ஸ்ரேயாஸின் கம்பேக்

ஸ்ரேயாஸின் கம்பேக்

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங் வீரர் இஷான் கிஷான் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். எனினும் மறுமுணையில் அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபார்ம் அவுட் என்ற விமர்சனங்களுக்கு அவர் முற்று புள்ளி வைத்தார். மொத்தமாக 40 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 64 ரன்களை விளாசினார்.

ஹூடாவின் அதிரடி

ஹூடாவின் அதிரடி

ஸ்ரேயாஸுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய இளம் வீரர் தீபக் ஹூடா 25 பந்துகளில் 38 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணி 13 ஓவர்களில் 122 /3 ரன்கள் என்ற வலுவான நிலைக்கு சென்றது. விக்கெட்கள் ஒருபுறம் விழுந்தாலும் இந்திய அணி தனது அதிரடி ஃபார்முலாவை மட்டும் விடவில்லை. அதே ரன்ரேட்டை தொடர்ந்து வெளிகாட்டி வந்தது.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

3வது விக்கெட்டிற்கு களமிறங்கிய சஞ்சு சாம்சன் 15 ரன்களை சேர்த்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் விளையாடினார். 16 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 28 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்களை குவித்தது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

கடந்த 4வது டி20 போட்டியும் பேட்டிங்கிற்கு சாதகமான இதே ஃப்ளோரிடா மைதானத்தில் தான் நடைபெற்றது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அனால் இன்றைய போட்டியில் சீனியர் வீரர் புவனேஷ்வர் குமார் இல்லாததால், எப்படி சமாளிக்கப்போகின்றனர் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India vs west indies 5th t20 match ( இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 5வது டி20 போட்டி ) வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 5வது டி20 போட்டியில் இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
Story first published: Sunday, August 7, 2022, 22:17 [IST]
Other articles published on Aug 7, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X