For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் ஒரு நல்ல கேப்டன்.. உருகி, உருகி பேசும் அந்த இளம் கேப்டன்... எதற்காக?

மும்பை: ஐபிஎல் இளம் கேப்டனாக திகழும் ஷ்ரேயாஸ் ஐயர், தமது முன்னோடி ரோகித் சர்மா என்று உருகி, உருகி பேசியுள்ளார்.

ஐபிஎல் 12வது சீசன் நாளை ஆரம்பாகிறது. ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத பெங்களூர், டெல்லி கேப்பிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடந்த சீசனில் கவுதம் கம்பீரின் தலைமையில் களமிறங்கியது. தொடர் தோல்விகளால் கம்பீர் தொடரின் பாதியில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்து இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக பொறுப்பேற்றார்.

அனைத்து சீசனிலும் பிளே-ஆஃப் சென்ற ஒரே அணி சிஎஸ்கே தான்.. எப்படி தெரியுமா? ரகசியத்தை சொன்ன பிராவோ!!அனைத்து சீசனிலும் பிளே-ஆஃப் சென்ற ஒரே அணி சிஎஸ்கே தான்.. எப்படி தெரியுமா? ரகசியத்தை சொன்ன பிராவோ!!

இளம் வீரர்கள் உள்ள அணி

இளம் வீரர்கள் உள்ள அணி

அவரது தலைமையில் டெல்லி அணிக்கு சில வெற்றிகள் கிடைத்ததன. இந்த சீசனில் தொடரை வெல்லும் முனைப்புடன் டெல்லி களமிறங்குகிறது. தவான் தற்போது டெல்லி அணியில் உள்ளார். பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் என இளம் வீரர்களாக டெல்லி அணி காட்சியளிக்கிறது.

மற்றொரு பயிற்சியாளர்

மற்றொரு பயிற்சியாளர்

பவுலிங்கில் டிரெண்ட் போல்ட்டுடன், இஷாந்த் சர்மாவும் இணைந்துள்ளார். ரிக்கி பாண்டிங் என்ற தலைமை பயிற்சியாளராக உள்ள நிலையில், மற்றொரு தாதா கங்குலியை ஆலோசகராக டெல்லி அணி நியமித்துள்ளது.

சிறந்த கேப்டன்

சிறந்த கேப்டன்

இந்நிலையில், ஐபிஎல் இளம் கேப்டனாக திகழும் ஷ்ரேயாஸ் ஐயர், தான் முன்னோடியாக பார்க்கும் கேப்டன் யார் என்று மனமுருகி பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

அபாரமான வளர்ச்சி

அபாரமான வளர்ச்சி

ரோகித் சர்மாவின் வளர்ச்சி அபாரமானது. அனைத்து வீரர்களுக்கும் அவர் ஒரு உதாரணம். தனிப்பட்ட முறையில், எனக்கு சிறந்த முன்னுதாரணம்.

நல்ல விஷயங்கள்

நல்ல விஷயங்கள்

அவரிடம் கேப்டன்சி குறித்து நான் பேசியதில்லை. ஆனால் ஒரு நல்ல கேப்டனிடமிருந்து நல்ல விஷயங்களை கற்கலாம். அந்த வகையில் ரோகித்திடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.

ஐபிஎல் கோப்பை

ஐபிஎல் கோப்பை

2013, 2015, 2017 ஆகிய 3 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல்லில் மும்பை அணி வெற்றிகரமாக திகழ, ரோகித் முக்கிய காரணம். ரிக்கி பாண்டிங் என்ற ஜாம்பவானுக்கு பிறகு ரோகித்திடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதில் அவர் வென்றும் காட்டி உள்ளார் என்று கூறியிருக்கிறார். 2013, 2015, 2017 ஆகிய 3 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல்லில் மும்பை அணி வெற்றிகரமாக திகழ, ரோகித் முக்கிய காரணம். ரிக்கி பாண்டிங் என்ற ஜாம்பவானுக்கு பிறகு ரோகித்திடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதில் அவர் வென்றும் காட்டி உள்ளார் என்று கூறியிருக்கிறார்.

Story first published: Friday, March 22, 2019, 17:48 [IST]
Other articles published on Mar 22, 2019
English summary
Shreyas Iyer inspired by Rohit Sharma’s captaincy record.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X