For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்- இந்தியர்கள் யாரும் செய்யாத சாதனையை படைத்த ஸ்ரேயாஸ்..!!

கான்பூர் ; இந்தியா , நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், முதல் இன்னிங்சில் சதம் விளாசினார். இந்த சாதனையை மேற்கொண்ட 16வது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்

இந்த நிலையில், 2வது இன்னிங்சில் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 41 ரன்கள் என்ற ஸ்கோரில் தடுமாறியது.

அரைசதம்

அரைசதம்

அப்போது களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், டெஸ்ட் போட்டிக்கு ஏற்றார் போல் ஆடி ரன்களை சேர்த்தார். நியூசிலாந்து வீரர்களை வெறுப்பேற்றும் வகையில் மட்டையை போட்டும், அவ்வப்போது பவுண்டரிகளை விளாசியும் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடினார். இதன் மூலம் 109 பந்துகளில் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசினார்.

முதல் இந்தியர்

முதல் இந்தியர்

இதனையடுத்து, அறிமுக டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம், 2வது இன்னிங்சில் அரைசதம் விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்தார். இவருக்கு முன் 15 இந்தியர்கள் முதல் இன்னிங்சில் சதம் விளாசினாலும், இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழந்துவிடுவார்கள். உலக அளவில் இந்த சாதனையை மேற்கொண்ட 16வது வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்

பாராட்டு

பாராட்டு

ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டத்தில் இந்திய அணி தற்போது கவுரமான ஸ்கோரையும், 200 ரன்களை கடந்தும் முன்னிலை பெற்றுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு பாராட்டு தெரிவித்த கவாஸ்வர், இதே மைதானத்தில் குண்டப்ப விஸ்வநாத், அறிமுக போட்டியில் சதம் விளாசியதாக குறிப்பிட்டார். விஸ்வநாத் சதம் விளாசினால் அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்காது என்று குறிப்பிட்ட கவாஸ்கர், அதை போல் ஸ்ரேயாஸ் ஐயரும் மேற்கொள்வார் என நம்புவதாக தெரிவித்தார்.

Recommended Video

Suryakumar Yadav வேண்டாம்.. Shreyas Iyer-ஐ குறிவைக்கும் Mumbai Indians
கவனம்

கவனம்

ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அந்த கையை அவர் சரியாக பயன்படுத்த முடியவில்லை.இதனால், அவரது பேட்டிங்கில் சிறிய குறை தென்படுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அதை அவர் சரி செய்து கொண்டால், ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடித்துவிடுவார் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Story first published: Sunday, November 28, 2021, 15:13 [IST]
Other articles published on Nov 28, 2021
English summary
Shreyas Iyer is the First Indian to achieve this feet in Test. Shreyas scored 100 and 50 in his first Test match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X