For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுதான் கடைசி வாய்ப்பு.. உஷாரான ஸ்ரேயாஸ் ஐயர்.. குணமடைய இவ்ளோ தீவிரமா? தவான் - ஹர்திக்-க்கு ஷாக்!

டெல்லி: ஸ்ரேயாஸ் ஐயர் தனக்கு இருக்கும் சூப்பர் வாய்ப்பை ஒரு வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.

இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்து தொடரின் போது தோள்பட்டையில் காயத்தால் பாதிக்கப்பட்டார். இதன்பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 செம அப்டேட்.. மீண்டும் ஐபிஎல்.. நினைச்சு பார்க்காத நாட்டுல - ராஜஸ்தான் ஓனர் நம்பிக்கை செம அப்டேட்.. மீண்டும் ஐபிஎல்.. நினைச்சு பார்க்காத நாட்டுல - ராஜஸ்தான் ஓனர் நம்பிக்கை

இந்நிலையில் கிரிக்கெட்டில் நீண்ட காலம் ஓய்வில் இருந்தால் புது வீரர்கள் தனது இடத்தை ஆக்கிரமித்துவிடுவார்கள் என்பதை நன்கு புரிந்துவைத்துக்கொண்டுள்ளார்.

இலங்கை சுற்றுப்பயணம்

இலங்கை சுற்றுப்பயணம்

இந்திய அணி வரும் ஜூலை மாதத்தில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. சீனியர் வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பார்கள் என்பதால் இலங்கை தொடரில் இந்திய 'பி' அணி தான் விளையாடவுள்ளது. இவர்களை வழிநடத்தும் கேப்டன் யாராக இருக்கும் என்ற கேள்வி தான் சமீப நாட்களாக இணையத்தில் உலா வருகிறது.

கேப்டன் யார்?

கேப்டன் யார்?

ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடற்தகுதியுடன் இருந்தால் அவர்தான் நிச்சயமாக கேப்டனாக செய்யப்படுவார். ஆனால் அவருக்கு செய்துள்ள அறுவை சிகிச்சையின் படி குறைந்தது 4 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனக்கூறப்படுகிறது. இதனால் இந்திய அணியை வழிநடத்த ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

இந்நிலையில் அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஸ்ரேயாஸ். அவர் தனது வீட்டிலேயே தீவிர உடற்பயிற்சி செய்து தன்னை தயார் படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் ட்விட்டர் கேப்சனில், " இங்கு வேலை நடந்துக்கொண்டிருக்கிறது கொஞ்சம் கவனமாக பாருங்கள்" எனக்குறிப்பிட்டுள்ளார். இது ஷிகர் தவான் - ஹர்திக் இடையேயான கேப்டன்ஷிப் போட்டியை குறிப்பிடும் வகையில் தானும் தயாராக தான் இருப்பதாக மறைமுகமாக பதிலளித்துள்ளார்.

வாய்ப்பு

வாய்ப்பு

டி20 உலகக்கோப்பைகான அணி தேர்வுக்கு இலங்கை சுற்றுப்பயணம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் சிறப்பாக ஆடும் வீரர்கள் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எனவே இந்த தொடரை விட்டுவிடக்கூடாது என்பதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த தொடரில் பங்கேற்று தன்னை நிரூபிக்காவிட்டால் அடுத்தடுத்த தொடர்களிலும் ஸ்ரேயாஸுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். ஏனென்றால் அதற்குள் இளம் வீரர்கள் பலர் அவரின் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

Story first published: Friday, May 14, 2021, 10:26 [IST]
Other articles published on May 14, 2021
English summary
Shreyas Iyer on Heavy Training to recovery from shoulder injury - WATCH
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X