For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கவாஸ்கரோட 1970 சாதனையை முறியடித்த இளம் வீரர்... குவியும் பாராட்டுக்கள்

பிரிஸ்பேன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இறுதி நாள் ஆட்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்சில் இந்தியா ஆடி வருகிறது.

இதில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் முறையே 7 மற்றும் 91 ரன்களை அடித்துள்ளனர்.

சண்டை செய்யணும்.. கிரிக்கெட் உலகை மிரள வைத்த இந்திய வீரர்களின் போராட்ட குணம்.. எப்படி சாத்தியமானது? சண்டை செய்யணும்.. கிரிக்கெட் உலகை மிரள வைத்த இந்திய வீரர்களின் போராட்ட குணம்.. எப்படி சாத்தியமானது?

இந்த போட்டியின்மூலம் 4வது இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் குவித்த இளம் துவக்க வீரர் என்ற முன்னாள் கேப்டன் கவாஸ்கரின் சாதனையை கில் முறியடித்துள்ளார்.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகறது. இன்றைய 5வது நாள் ஆட்டத்தில் இந்தியா நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது.4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களை அடித்துள்ளது. மயங்க் அகர்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

சொதப்பிய ரோகித் சர்மா

சொதப்பிய ரோகித் சர்மா

இந்த போட்டியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கி விளையாடிய நிலையில் ரிஷப் பந்த் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 91 ரன்களை அடித்து அதகளம் செய்தார். சதமடிக்காவிட்டாலும் அவரது இந்த ஸ்கோர் மூலம் இந்திய அணி சரியான துவக்கத்தை பெற்றுள்ளது.

50க்கு மேல் அடித்த இளம் துவக்க வீரர்

50க்கு மேல் அடித்த இளம் துவக்க வீரர்

இந்நிலையில், 4வது இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் குவித்துள்ள இளம் துவக்க வீரர் என்ற பெருமை சுப்மன் கில்லிற்கு கிடைத்துள்ளது. அவர் 21 வயது மற்றும் 133 நாட்களில் இந்த சாதனையை புரிந்துள்ளார். முன்னதாக கடந்த 1970-71ல் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தன்னுடைய முதல் போட்டியில் தன்னுடைய 21 வயது மற்றும் 243 நாட்களில் இந்த சாதனையை செய்திருந்தார்.

சுப்மன் கில் முறியடிப்பு

சுப்மன் கில் முறியடிப்பு

சுனில் கவாஸ்கரின் இந்த சாதனையைதான் தற்போது சுப்மன் கில் முறியடித்துள்ளார். சுப்மன் கில் இந்த சாதனையை தன்னுடைய 3வது டெஸ்ட் போட்டியில் மேற்கொண்டுள்ளார். இது கில்லின் இரண்டாவது அரைசதமாகும். 146 பந்துகளில் அவர் இந்த 91 ரன்களை இன்றைய போட்டியில் அடித்துள்ளார்.

Story first published: Tuesday, January 19, 2021, 13:39 [IST]
Other articles published on Jan 19, 2021
English summary
The youngster failed to get to his maiden Test century as he was dismissed for 91 by Nathan Lyon
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X