For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம ரெக்கார்டு.. கேப்டன் கோலியின் 10 ஆண்டு சாதனையை தகர்த்து எறிந்த 20 வயது இளம் வீரர்!

மும்பை : இளம் வீரர் ஷுப்மன் கில் உள்ளூர் தொடரான தியோதர் டிராபியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் 10 ஆண்டு சாதனை ஒன்றை முறியடித்து அசத்தி இருக்கிறார்.

இருபது வயதே ஆன ஷுப்மன் கில் தியோதர் ட்ராபி தொடரில் இந்தியா சி அணிக்கு கேப்டனாக இருக்கிறார். அந்த கேப்டன்சி மூலம் தான் சாதனை புரிந்துள்ளார் ஷுப்மன் கில்.

கோல் அடிக்க வாய்ப்பு வேண்டும்.. காத்திருந்து சாதித்த கோவா வீரர் மன்வீர் சிங்!!கோல் அடிக்க வாய்ப்பு வேண்டும்.. காத்திருந்து சாதித்த கோவா வீரர் மன்வீர் சிங்!!

தியோதர் ட்ராபி தொடர்

தியோதர் ட்ராபி தொடர்

இந்தியாவின் சிறந்த உள்ளூர் வீரர்கள் பங்கேற்கும் ஒருநாள் போட்டி தொடர் தான் தியோதர் ட்ராபி. இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி என மூன்று அணிகளாக இந்த முறை இந்த தொடர் நடத்தப்பட்டது.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா பி - இந்தியா சி அணிகள் மோதின. இந்தியா சி அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் களமிறங்கினார். அதன் மூலம் ஒரு சாதனை பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.

இளம் வயது கேப்டன்

இளம் வயது கேப்டன்

தியோதர் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இளம் வயது கேப்டன் என்ற பெருமையை பெற்றார் ஷுப்மன் கில். இவருடைய வயது - 20 வருடம், 57 நாட்கள் ஆகும்.

கோலி சாதனை

கோலி சாதனை

முன்னதாக, பத்து ஆண்டுகளுக்கு முன் விராட் கோலி நார்த் சோன் அணியின் கேப்டனாக தியோதர் ட்ராபி இறுதியில் பங்கேற்றார். அப்போது அவரது வயது - 21 வருடம், 142 நாட்கள் ஆகும். அதுவே இதுவரை சாதனையாக இருந்தது. அதை உடைத்துள்ளார் ஷுப்மன் கில்.

போட்டியில் என்ன நடந்தது?

போட்டியில் என்ன நடந்தது?

தியோதர் ட்ராபி இறுதிப் போட்டியில் இந்தியா பி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 283 ரன்கள் குவித்து அசத்தியது. அடுத்து ஆடிய இந்தியா சி அணி சொதப்பலாக ஆடியது.

தோல்வி அடைந்தது

தோல்வி அடைந்தது

ஷுப்மன் கில் வெறும் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா சி அணி 50 ஓவர்களில் 232 ரன்கள் மட்டுமே எடுத்து 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Story first published: Monday, November 4, 2019, 19:56 [IST]
Other articles published on Nov 4, 2019
English summary
Shubman Gill breaks Virat kohli record in Deodhar trophy. He becomes youngest captain to play in a Deodhar trophy finals.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X