For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின், சேவாக், ரோகித் சாதனையை உடைத்த சுப்மான் கில்.. தொடக்க வீரராக புதிய வரலாறு.. முழு விவரம்

ஹாமில்டன் : அண்டர் 19 கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து பிரபலம் அடைந்த சுப்மான் கில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.

டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக சுப்மான் கில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் தனது திறமையை அவர் நிரூபித்தாலும் காயம் காரணமாக தொடர்ந்து தனது இடத்தை உறுதி செய்ய முடியவில்லை.

ஆனால் 2022ஆம் ஆண்டு சுப்மான் கில்லுக்கு புதிய அத்தியாயத்தை அவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு தந்துள்ளது.

 அபார ஆட்டம்

அபார ஆட்டம்

இந்த நிலையில் சுப்மான் கில், ஒரு நாள் போட்டியில் தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். நடப்பாண்டில் சுப்மான் கில்லுக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்டு சுப்மான் கில் இந்திய அணியில் தமக்க என ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.

 அதிக ரன்கள்

அதிக ரன்கள்

2022 ஆம் ஆண்டில் மட்டும் சுப்மான் கில் ஒரு சதம், ஐந்து அரை சதம் என 625 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 78.12 ஆகும். 104.16 என்ற அளவில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் இருக்கிறது. சுப்மான் கில், தற்போது சச்சின், சேவாக், ரோகித் சர்மா போன்றவர்களின் சாதனையை உடைத்திருக்கிறார்.அதாவது இந்தியாவை பொறுத்தவரை தொடக்க வீரராக 10 இன்னிங்ஸ் முடிவில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார்.

சச்சின் சாதனை முறியடிப்பு

சச்சின் சாதனை முறியடிப்பு

சுப்மான் கில் 495 ரன்கள் அடித்திருக்கிறார். இதற்கு முன்பு சச்சின் 478 ரன்களிலும், ராகுல் டிராவிட் 463 ரன்களிலும், தவான் 432 ரன்களும், சேவாக் 425 ரன்கள் அடித்து இருந்தனர். இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சராசரியை வைத்துள்ள இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையையும் சுப்மான் கில் படைத்திருக்கிறார். இந்த பட்டியலில் சுப்மான் கிக் 70.71 என்ற சராசரியை வைத்திருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா 56.5 என்ற சராசரியையும், சச்சின் டெண்டுல்கர் 48.29 என்ற சராசரியும் ஷிகர் தவான் 44.98 என்ற சராசரியும் வைத்திருக்கிறார்.

முதலிடம்

முதலிடம்

மற்றொரு சாதனையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 14 இன்னிங்ஸ் முடிவில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் சுப்மான் கிக் படைத்திருக்கிறார். அவர் 14 இன்னிங்ஸ் முடிவில் 674 ரன்களுடன் முதலிடத்திலும், ஸ்ரேயாஸ் ஐயர் 634 ரன்கள் உடன் இரண்டாவது இடத்திலும், நவஜீத் சிந்து 634 ரன்கள் உடன் மூன்றாவது இடத்திலும் ஷிகர் தவான் 551 ரன்கள் உடன் நான்காவது இடத்திலும், விராட் கோலி 493 ரன்கள் உடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

Story first published: Sunday, November 27, 2022, 21:10 [IST]
Other articles published on Nov 27, 2022
English summary
Shubman gill created new odi record as opener after playing 14 innings சச்சின், சேவாக், ரோகித் சாதனையை உடைத்த சுப்மான் கில்.. தொடக்க வீரராக புதிய வரலாறு.. முழு விவரம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X