For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடேங்கப்பா.. விராட் கோலியின் அசத்தல் சாதனையை முறியடிக்கும் சுப்மன் கில்.. இன்று நிறைவேறுமா??

ஐதராபாத்: நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி, தவான் ஆகியோரின் பிரமாண்ட சாதனையை தகர்க்க சுப்மன் கில்லுக்கு வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி, அதே ஆதிக்கத்தை நியூசிலாந்து தொடரிலும் செலுத்த முனைப்பு காட்டி வருகிறது. மறுபுறம் நியூசிலாந்து அணியோ 50 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைக்க போராடவுள்ளது.

எதிர்பார்த்த அனைத்தும் நிறைவேறும்.. இந்தியா - நியூசிலாந்து முதல் ODI.. பிட்ச்-ல் உள்ள சூப்பர் அம்சம்எதிர்பார்த்த அனைத்தும் நிறைவேறும்.. இந்தியா - நியூசிலாந்து முதல் ODI.. பிட்ச்-ல் உள்ள சூப்பர் அம்சம்

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஓப்பனிங் இடத்தில் யார் களமிறங்கவுள்ளார் என்ற குழப்பம் இருந்து வந்தது. ஆனால் அதனையெல்லாம் உடைத்தெறிந்து இடத்தை உறுதி செய்துவிட்டார் சுப்மன் கில். இலங்கை அணியுடனான தொடரில் சந்தேகங்களுக்கு மத்தியில் களமிறங்கிய அவர், முதல் போட்டியில் 70 ரன்களும், 3வது போட்டியில் 116 ரன்களையும் விளாசினார்.

புது சாதனை

புது சாதனை

இந்நிலையில் நியூசிலாந்து தொடரில் புதிய சாதனை படைக்க காத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிவேகமாக 1000 ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் முதலிடத்தை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் 24 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்தனர். ஆனால் தற்போது சுப்மன் கில் இதனை முறியடிக்கவுள்ளார்.

கில்லின் ஸ்கோர்

கில்லின் ஸ்கோர்

இளம் வீரர் சுப்மன் கில் தற்போது வரை 18 இன்னிங்ஸ்களில் விளையாடி 894 ரன்களை அடித்துள்ளார். அவர் இன்னும் 106 ரன்களை அடித்து அந்த பட்டியலில் முதலிடம் பிடிக்க இன்னும் 6 இன்னிங்ஸ்கள் உள்ளது. எனவே நியூசிலாந்துடனான 3 போட்டிகளை பயன்படுத்தி புதிய சாதனையை படைக்க சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

இஷான் கிஷான்

இஷான் கிஷான்

இதுஒருபுறம் இருக்க இளம் வீரர் இஷான் கிஷான் மிடில் ஆர்டருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் இந்த தொடரில் இல்லாததால் அதிரடியாக விளையாடக்கூடிய இஷான் கிஷான் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 5வது இடத்தில் விளையாடுவார் என கூறப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, January 18, 2023, 12:56 [IST]
Other articles published on Jan 18, 2023
English summary
Team India's Young gun Shubman gill has a chance to break virat kohli and Dhawan's record in IND vs NZ 1st ODI, here is the details
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X