For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவோட மதிப்புமிக்க சொத்து கில்... அவர் சதமடிப்பார்னு எதிர்பார்த்தேன்... கவாஸ்கர் சிலிர்ப்பு

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் கடந்த இரு போட்டிகளில் சிறப்பாக விளையாடி பல்வேறு தரப்பினரின் பாரட்டுக்களை பெற்று வருகிறார் துவக்க வீரர் சுப்மன் கில்.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 50 ரன்களை அடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் இந்திய அணியின் சிறப்பான வீரர் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சொன்ன முடிவு.. அடம் பிடித்த பிசிசிஐ.. பரபர காட்சிகள்.. என்ன நடந்தது?ஆஸ்திரேலியா சொன்ன முடிவு.. அடம் பிடித்த பிசிசிஐ.. பரபர காட்சிகள்.. என்ன நடந்தது?

50 ரன்களை அடித்து அசத்தல்

50 ரன்களை அடித்து அசத்தல்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது போட்டியின் முதல் இன்னிங்சில் துவக்க வீரராக களமிறங்கி ஆடிய சுப்மன் கில் 50 ரன்களை அடித்துள்ளார். தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே தன்னுடைய முதல் அரைசதத்தை அடித்து அனைவரது பாராட்டுக்களையும் அவர் பெற்றுள்ளார்.

கவாஸ்கர் பாராட்டு

கவாஸ்கர் பாராட்டு

இந்நிலையில் அவர் இந்திய அணியின் மதிப்புமிக்க வீரர் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் அடித்து ஆடுவதைவிட தடுத்து ஆடுவதில் மிகவும் சிறப்பானவராக காணப்படுவதையும் சுட்டிக் காட்டி பாராட்டியுள்ளார் கவாஸ்கர்.

நம்பிக்கையுடன் ஆடிய கில்

நம்பிக்கையுடன் ஆடிய கில்

சுப்மன் கில் அரைசதம் அடித்த நிலையில், அவர் அதை சதமாக மாற்றி காட்டுவார் என்று தான் எதிர்பார்த்ததாகவும் அவர் கூறினார். அவர் அடித்து ஆடிய ஷாட்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய வகையில் அமைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். துவக்க வீரராக நம்பிக்கை மற்றும் விரைவாக ஆடியதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

கவாஸ்கர் நம்பிக்கை

கவாஸ்கர் நம்பிக்கை

கில்லிற்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதாகவும் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில் பார்ட்னர்ஷிப் அமைத்து 70 ரன்களை இன்றைய போட்டியில் அடித்திருந்தார். கடந்த 17 இன்னிங்ஸ்களில் வெளிநாட்டில் நடந்துள்ள டெஸ்ட் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் துவக்க வீரர்கள் அடித்துள்ளது இதுவே முதல் முறை.

Story first published: Friday, January 8, 2021, 18:25 [IST]
Other articles published on Jan 8, 2021
English summary
Shubman Gill's defence was as good as his Attacking batting -Gavaskar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X