For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எந்த கோலும் இல்லை... ஆனா ரொம்ப சந்தோஷமா இருக்கு... காரணம் என்ன? சொல்கிறார் சுப்மன் கில்!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் இடம்பெற்றுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020 தொடரில் கேகேஆர் அணிக்காக 14 போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில், 440 ரன்களை குவித்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் எந்த இலக்கையும் தான் வைத்திருக்கவில்லை என்றும் ஆனால் மகிழ்ச்சி அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கேகேஆர் அணி வீரர் கில்

கேகேஆர் அணி வீரர் கில்

ஐபிஎல் 2020 தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாடிய சுப்மன் கில் 14 போட்டிகளில் விளையாடி 440 ரன்களை குவித்தார். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் அவர் இடம்பெற்றுள்ளார்.

மகிழ்ச்சி அதிகமாக இருக்கிறது

மகிழ்ச்சி அதிகமாக இருக்கிறது

இதனிடையே, கேகேஆர் அணிக்காக அவர் அளித்துள்ள பேட்டியில் இந்த ஆஸ்திரேலிய தொடரில் தான் எந்த இலக்கையும் வைத்திருக்கவில்லை என்றும் ஆனால் மகிழ்ச்சி அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்களில் விளையாடுவதற்காக தான் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கேகேஆர் வீடியோ வெளியீடு

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தான் முதல்முறையாக விளையாடுவதை சுட்டிக் காட்டிய கில், சிறு வயது முதல், தான் இந்தியா -ஆஸ்திரேலியா போட்டிகளை அதிக ஆர்வத்துடன் கண்டுகளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவை கேகேஆர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை துவக்கம்

வரும் வெள்ளிக்கிழமை துவக்கம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த தொடர்களில் தன்னுடைய நண்பர்களும் அதிகமாக தேர்வாகியுள்ளது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் சுப்மன் கில் கூறியுள்ளார். வரும் வெள்ளிக்கிழமை இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 23, 2020, 18:32 [IST]
Other articles published on Nov 23, 2020
English summary
India and Australia are slated to lock horns against each other in three ODIs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X