For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் கொடுத்த பலே ஐடியா.. சதத்திற்கு நீங்க தான் காரணம்.. ஹர்திக் குறித்து சுப்மன் கில் பேச்சு

அகமதாபாத் : நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் 63 பந்தில் 126 ரன்கள் விளாசி அசத்தினார்.

ஒரு நாள் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிராக கில் 360 ரன்கள் எடுத்த நிலையில், டி20 போட்டியில் சொதப்பினார். 7,11 என ரன்களில் தொடர்ந்து கில் ஆட்டம் இழந்தார்.

ஆனால் இன்று தன்னுடைய திறமையை நிரூபித்த சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டிலும் தன்னுடைய இடத்தை பூர்த்தி செய்து கொண்டார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்

நம்பிக்கை தந்தீர்கள்

நம்பிக்கை தந்தீர்கள்

இந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு சுப்மன் கில்லிடம், ஹர்திக் பாண்டியா உரையாடினார். அப்போது சுப்மன் கில், பேசியது பின்வருமாறு டி20 கிரிக்கெட்டில் என் மீது மற்றவர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்யவே இல்லை. நான் சிறப்பாக விளையாட வேண்டும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் நீங்கள் தான் எனக்கு நம்பிக்கையை கொடுத்தீர்கள்.

கை கொடுத்தது

கை கொடுத்தது

போட்டி தொடங்குவதற்கு முன்பு நீங்கள் என்னுடைய ஆட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து விளையாடு என்று அறிவுரை கூறினீர்கள். நீங்கள் சொன்ன ஒவ்வொரு சின்ன விஷயம் கூட எனக்கு உறுதுணையாக இருந்தது. நான் கூடுதலாக எதையும் செய்யத் தேவையில்லை. உன்னுடைய இயல்பான ஆட்டத்தை நீ வெளிப்படுத்து என்று நீங்கள் கூறியது என்று நிச்சயம் எனக்கு கை கொடுத்தது.

 அறிவுரை

அறிவுரை

எனது தந்தை தான் நான் எப்படி பயிற்சி செய்ய வேண்டும் என்பது குறித்து திட்டமிட்டார். அது எனக்கு 90% என்னுடைய ஆட்டத்தை வலுப்பெற உதவியது. பேட்டிங்கில் தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும் என்றால் மனதளவில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். இதை நீங்கள் தான் என்னிடம் சொன்னீர்கள். அதை நான் பின்பற்றினேன். நான் ஒவ்வொரு முறையும் சிக்ஸ் அடித்த பிறகு நீங்கள் என்னிடம் வந்து இதே ஷாட்டை தொடர்ந்து ஆடு, வேறு எதையும் கூடுதலாக செய்ய வேண்டாம் என்று அறிகுறி வழங்கினீர்கள்.

சாண்டனர் குறித்து அட்வைஸ்

சாண்டனர் குறித்து அட்வைஸ்

பெரிதாக உனக்கு அழுத்தத்தை கொடுக்காதே என்று ஒவ்வொரு பந்திலும் எனக்கு நீங்கள் ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தீர்கள். குறிப்பாக மிச்டெக் சாண்டரின் கடைசி ஓவரை நான் அடித்து ஆட நினைத்தேன். ஆனால் நீங்கள் தான் சாட்னர் ஓவரை நீ அடிக்க வேண்டாம். கொஞ்சம் பொறுமை காத்து மற்ற ஓவர்களை குறி வைத்து அடி என்று சொன்னீர்கள். ஏனென்றால் சாண்ட்னர் திடீரென்று நுட்பமாக பந்து வீசி ஆட்டம் இழக்க வைத்து விடுவார் என்று நீங்கள் விளக்கம் அளித்தீர்கள். இது அனைத்தும் இன்று நான் சதம் அடிக்க பயனாக இருந்தது என்று ஹர்திக் கூறினார்.

Story first published: Thursday, February 2, 2023, 18:09 [IST]
Other articles published on Feb 2, 2023
English summary
Shumban gill gives heartfelt tribute for Hardik pandya for the century
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X