கவாஸ்கர், கபில் தேவ் மறக்க முடியாத இடம்.. டிரம்ப் திறந்து வைத்த மோதிரா மைதானத்தில் நடந்த நிகழ்வுகள்!

அஹ்மதாபாத் : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சேர்ந்து கலந்து கொண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த மைதானம் தற்போது முற்றிலும் அழிக்கப்பட்டு, பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன் இருந்த மோதிரா மைதானத்தில் பல அரிய கிரிக்கெட் சாதனைகள் நடந்துள்ளன.

சுனில் கவாஸ்கர் சாதனை

சுனில் கவாஸ்கர் சாதனை

1983இல் மாஸ்டர் பேட்ஸ்மேன் என புகழப்பட்ட சுனில் கவாஸ்கர், ஜெப்ரி பாய்காட்டை முந்தி டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை செய்தார். அது தான் மோதிரா மைதானத்தில் நிகழ்ந்த மிகப் பெரும் சாதனை ஆகும்.

கபில் தேவ் சாதனை

கபில் தேவ் சாதனை

அதன் பின் 1994இல் கபில் தேவ் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை செய்தார். நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹேட்லீ 431 விக்கெட்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தி இருந்த நிலையில், அதை முறியடித்தார் கபில் தேவ்.

2011 உலகக்கோப்பை

2011 உலகக்கோப்பை

2011 உலகக்கோப்பை தொடரை எந்த இந்திய ரசிகராலும் மறக்க முடியாது. அந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற ஆஸ்திரேலிய அணியை காலிறுதியில் வீழ்த்தி இந்திய அணி, அசத்தியது. அந்தப் போட்டி மோதிரா மைதானத்தில் தான் நடை பெற்றது.

யுவராஜ் சிங் ஆட்டம்

யுவராஜ் சிங் ஆட்டம்

அந்தப் போட்டியில் யுவராஜ் சிங் சிறப்பான ஆல் ரவுண்டராக செயல்பட்டு இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். அதன் பின் இந்திய அணி அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தியது.

இருக்கைகள்

இருக்கைகள்

அந்த மோதிரா மைதானம் 1982ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போது அந்த மைதானத்தில் 49,000 இருக்கைகள் இருந்தன. அந்த பழைய மைதானத்தை இடித்து விட்டு தற்போது பிரம்மாண்டமான முறையில் சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

பெரிய மைதானம்

பெரிய மைதானம்

தற்போது 64 ஏக்கரில், 700 கோடி ரூபாய் பொருட் செலவில் கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த மைதானத்தில் 1,10,000 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னை விட பெரிய மைதானமாக இது மாறி உள்ளது. உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற இடத்தையும் இது பெற்றுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Significant cricket records broken in Motera stadium
Story first published: Monday, February 24, 2020, 20:08 [IST]
Other articles published on Feb 24, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X