For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஏலத்தில் நியூ. வீரர்களுக்கு பாரபட்சம்.புதிய சர்ச்சையை கிளப்பும் முன்னாள் வீரர்.பின்னணி என்ன?

சென்னை: நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவில் பாரபட்சம் காட்டப்படுவதாக முன்னாள் வீரர் வைத்துள்ள புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே டி20 தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர் டேவன் கான்வாய்யின் ஆட்டம் அனைவரையும் அசரடித்தது.

4 நாள் லேட்.. இது மட்டும் கொஞ்சம் சரியா நடந்து இருந்தா.. கதையே வேற.. அஸ்வின் சொன்ன அந்த விஷயம்! 4 நாள் லேட்.. இது மட்டும் கொஞ்சம் சரியா நடந்து இருந்தா.. கதையே வேற.. அஸ்வின் சொன்ன அந்த விஷயம்!

இந்நிலையில் அவர் ஐபிஎல் ஏலத்தில் ஒரு அணியால் கூட ஏலம் எடுக்கப்படாதது குறித்து முன்னாள் நியூசிலாந்து வீரர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதிரடி

அதிரடி

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பிப்ரவரி 22ம் தேதி நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி தடுமாறிய போது ஒற்றை ஆளாக போராடிய டேவான் கான்வாய் 59 பந்துகளில் 99* ரன்கள் அடித்து அனைவரையும் வியக்கவைத்தார்.

பாராட்டு

பாராட்டு

டேவான் கான்வாயின் ஆட்டத்தை கண்ட ரசிகர்கள் முன்னாள் வீரர்கள், வீரர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர். அந்த வகையில் இந்திய வீரர் அஷ்வின் ட்விட்டரில் அற்புதமான விளையாட்டு என புகழ்ந்திருந்தார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய டேவான் கான்வாய் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஏலம் விடப்பட்டார். ஆனால் அவர் மீது ஒரு அணி கூட ஆர்வம் காட்டவில்லை. மாறாக யாரும் எதிர்பார்க்காத வீரர்களையே அதிகளவில் விலை கொடுத்து வாங்கி வந்தனர்.

சர்ச்சை

சர்ச்சை

அஸ்வினின் பாராட்டு ட்வீட்டிற்கு தற்போது ரிப்ளை செய்துள்ள நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டௌல், ஐபிஎல்-ல் ஆஸ்திரேலியாவின் 2ம் தர வீரர்களுக்கு தரும் முக்கியத்துவம் கூட நியூசிலாந்து வீரர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஐபிஎல் ஏலத்தில் டேவான் கான்வாய்யின் திறமை மதிப்பில்லாமல் போனது என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Story first published: Tuesday, February 23, 2021, 20:10 [IST]
Other articles published on Feb 23, 2021
English summary
Simon Doull accused IPl Auction after Conway's not picked up by any teams
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X