For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மறைந்த பின்னும் ட்ரென்டாகும் சாதனையாளர் சர் டொனால்ட் பிராட்மேன்.. அவரது 110வது பிறந்த நாள் இன்று

டெல்லி : கூகுள் டூடுள்-இல் அந்த நாளின் முக்கியமான நினைவுகள், பிரபலங்கள், சாதனையாளர்கள் பிறந்த தினம் உள்ளிட்டவற்றை கொண்டாடும். அந்த வகையில் இன்று கிரிக்கெட் சாதனையாளர் சர் டானல்ட் பிராட்மேனின் 110வது பிறந்த நாளை டூடுள் போட்டு கொண்டாடி உள்ளது கூகுள். அது தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

அந்த கூகுள் டூடுளில் பிராட்மேன் ஒரு பேட்டிங் ஸ்ட்ரோக் ஆடுவது போல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கிரிக்கெட்டில் இன்று வரை மிகச் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்டால் பிராட்மேன் தான் என அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். அவருக்கு இன்று 110வது பிறந்த நாள். தன் சாதனைகள் மூலம் இன்னும் நினைவுகளில் வாழ்கிறார் பிராட்மேன்.

Sir Donald Bradman trending online after his 110th birthday

பிராட்மேன் ஆகஸ்ட் 27, 19௦8 அன்று ஆஸ்திரேலியாவில் பிறந்தார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் ஆடிய அவர் அந்த காலத்தில் பந்துவீச்சாளர்களை மிரள வைத்த பேட்ஸ்மேனாக விளங்கினார்.

பிராட்மேனின் முதல் தர கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் என இரண்டின் சாதனைகளும் மலைப்பை ஏற்படுத்தும். முதல் தர கிரிக்கெட்டில் 234 போட்டிகளில், 338 இன்னிங்க்ஸ்கள் ஆடிய அவர் 28,067 ரன்கள் குவித்துள்ளார். இதில் 117 சதங்கள், 69 அரைசதங்கள். இதில் இவர் எடுத்த அதிகபட்ச ரன் 452. பிராட்மேன் என்றால் அனைவரும் குறிப்பிடுவது அவரது ஆவரேஜ் தான். முதல் தர போட்டிகளில் அவருடைய ஆவரேஜ் 95.14.

சர்வதேச கிரிக்கெட்டில் 52 போட்டிகளில், 80 இன்னிங்க்ஸ்கள் ஆடிய அவர் 6996 ரன்கள் எடுத்தார். 29 சதங்கள், 13 அரைசதங்கள் எடுத்த அவரது ஆவரேஜ் 99.94. இந்த ஆவரேஜ் தான் பிராட்மேன் சாதனையின் உச்சம்.

பிராட்மேன் 110வது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில் அவரது பல சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது. அவற்றை காண்போம்.அதிகபட்ச டெஸ்ட் பேட்டிங் ஆவரேஜ் - 99.94

ஒரே அணிக்கு எதிராக 5000 ரன்கள் எடுத்து சாதனை. இதை இங்கிலாந்து அணிக்கு எதிராக செய்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிராக மொத்தம் 5028 ரன்கள் குவித்திருக்கிறார் பிராட்மேன்.

அதிக முச்சதம் (300+) - டெஸ்ட் வரலாற்றில் இதுவரை நான்கு வீரர்கள் இரண்டு முச்சதம் அடித்துள்ளனர். அதில் பிராட்மேனும் ஒருவர். மற்ற மூவர், லாரா, சேவாக் மற்றும் கிறிஸ் கெயில்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு இடைவேளைகளுக்கு நடுவே 6 முறை சதம் அடித்துள்ளார். இந்த சாதனையையும் இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

7 முறை ஒரே டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இந்த சாதனையை லாராவும் செய்துள்ளார். எனினும், இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

Story first published: Monday, August 27, 2018, 12:57 [IST]
Other articles published on Aug 27, 2018
English summary
Sir Donald Bradman trending online after his 110th birthday
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X