For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் ஆடுறதுக்காக எக்ஸாம் எழுதவே போக மாட்டார்... ரிசல்ட் வரும்போதுதான் தெரியும்!

டெல்லி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் ஹீரோவாக மாறியுள்ளார் முகமது சிராஜ்.

தன்னுடைய முதல் டெஸ்ட் தொடரான இந்த தொடரின் 4வது போட்டியின் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மூத்த வீரர் இப்படி பண்ணலாமா? களத்தில் ரோஹித் சர்மா ஆடிய விதம்.. தொடரும் கேள்விகள்.. ஷாக்கிங்! மூத்த வீரர் இப்படி பண்ணலாமா? களத்தில் ரோஹித் சர்மா ஆடிய விதம்.. தொடரும் கேள்விகள்.. ஷாக்கிங்!

இந்நிலையில் கிரிக்கெட் ஆடுவதற்காக அவர் எக்ஸாம் எழுதுவதை தவிர்த்து விடுவார் என்றும், எக்ஸாம் ரிசல்ட் வரும்போது தான் இது வீட்டிற்கே தெரியவரும் என்றும் சிராஜின் சகோதரர் கூறியுள்ளார்.

சமநிலையில் அணிகள்

சமநிலையில் அணிகள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 4வது மற்றும் இறுதிப்போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதன் 5வது நாள் ஆட்டத்தில் இந்தியா ஆடி வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு டிராவுடன் சமநிலையில் உள்ளது.

கவனம் பெற்றள்ள சிராஜ்

கவனம் பெற்றள்ள சிராஜ்

இந்நிலையில் தற்போது பிரிஸ்பேனில் நடைபெற்றுவரும் இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் பௌலர்

முகமது சிராஜ் முறையே ஒன்று மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றுள்ளார்.

ஆஸி.க்கு நெருக்கடி கொடுத்த சிராஜ்

ஆஸி.க்கு நெருக்கடி கொடுத்த சிராஜ்

இந்த தொடரின் துவக்கத்தில் தன்னுடைய தந்தையை இழந்த போதிலும் தன்னுடைய தாய் கொடுத்த நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் காரணமாக நாடு திரும்பாமல் தொடர்ந்து ஆடிவருகிறார் சிராஜ். தன்னுடைய சிறப்பான முத்திரைகளையும் பதித்து ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.

எக்ஸாமை தவிர்த்த சிராஜ்

எக்ஸாமை தவிர்த்த சிராஜ்

இந்நிலையில் தன்னுடைய பள்ளி நாட்களில் கிரிக்கெட் விளையாடுவதற்காக எக்ஸாம் எழுதுவதை சிராஜ் தவிர்த்து விடுவார் என்றும் இதுகுறித்து எக்ஸாம் முடிவுகள் வரும்போது தான் குடும்பத்தினருக்கு தெரியவரும் என்றும் அவரது மூத்த சகோதரர் இஸ்மாயில் சிராஜ் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் விளையாடுவதை காண ஆசை

டெஸ்ட் விளையாடுவதை காண ஆசை

எக்ஸாம் முடிவுகளில் ஆப்சென்ட் ரிசல்ட் வரும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய தந்தை சிராஜிற்கு மிகுந்த பக்கபலமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளைவிட சிராஜ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதையே தன்னுடைய தந்தை மிகவும் விரும்பியதாகவும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Tuesday, January 19, 2021, 10:48 [IST]
Other articles published on Jan 19, 2021
English summary
Father wanted Siraj to play Test than ODI or T20 format -Siraj's Brother
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X