இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு

அகமதாபாத்: 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேட்பன் விராட் கோலிக்கு பல்வேறு சாதனைகள் படைக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் வரும் மார்ச் 4ம் தேதி அகமதாபாத்தில் உள்ள மொய்தீரா மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து

இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வரும் நிலையில் பேட்டிங்கில் சில விஷயங்களை செய்தால் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.

தோனியின் சாதனை

தோனியின் சாதனை

இதுவரை 59 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இந்திய அணி கேப்டனாக செயல்பட்டுள்ளார். தோனி இதுவரை 60 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். எனவே நாளை தொடங்கவிருக்கும் போட்டியின் மூலம் தோனியுடன், விராட் கோலி இணைவார்.

கேப்டன்

கேப்டன்

அணியின் கேப்டனாக விராட் கோலி இதுவரை சர்வதேச போட்டிகளில் 11,983 ரன்கள் அடித்துள்ளார். நாளை நடைபெறவிருக்கும் 4வது டெஸ்ட் போட்டியில் 17 ரன்கள் அடித்தால் அவர் 12000 ரன்களை கடந்த கேப்டன்களின் பட்டியலில் இணைவார். இதற்கு முன்னர் இந்த மைல்கல்லை ரிக்கி பாண்டிங், கிரீம் ஸ்மித் ஆகியோர் செய்துள்ளனர்.

வெற்றி

வெற்றி

இந்திய அணி கேப்டன் விராட் கோலி இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார். நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்த கேப்டன்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் க்ளைவ் லாலிட்ஸை சமன் செய்வார். அவர் இதுவரை 36 போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார்.

 ஜாம்பவான்

ஜாம்பவான்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன்களின் பட்டியலில் தற்போது ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் விராட் கோலி இருவரும் 41 சதங்களுடன் சமநிலையில் உள்ளனர். எனவே கோலி அடுத்த போட்டியில் சதமடிக்கும் பட்சத்தில் 42 சதங்களுடன் முதலிடத்திற்கு முன்னேறுவார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Skipper kohli has Dhoni, Steve Waugh records in sight as the India take on England in 4th Test
Story first published: Wednesday, March 3, 2021, 20:55 [IST]
Other articles published on Mar 3, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X