For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித்துக்கும், எனக்கும் சண்டையா..?அப்படிக்கா போயி.. இப்படிக்கா வந்து பதில் சொன்ன கோலி..!!

Recommended Video

Virat Kohli press meet| ரோஹித் சர்மா உடனான மோதல் குறித்து விளக்கம் கொடுத்த கோலி-வீடியோ

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து உள்ள கேப்டன் கோலி, எனக்கும் கோலிக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று அனைத்து சர்ச்சைகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.

உலக கோப்பை தோல்விக்கு பிறகு விராட் கோலிக்கும் ரோகித் ஷர்மாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, இந்திய அணிக்குள் வீரர்கள் 2 கோஷ்டியாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு ரோகித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் இந்திய அணி அடுத்து விளையாடவுள்ள தொடருக்கு தற்போது கோலியே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்தார் விராட் கோலி. அப்போது ரோகித்துடன் கருத்து வேறுபாடு என்பதை மறுத்தார்.

மிரட்டல் அடி.. வயசானாலும் இன்னும் அதே பூம் பூம் அப்ரிடி தான்.. என்ன ஸ்ட்ரைக் ரேட் தெரியுமா? மிரட்டல் அடி.. வயசானாலும் இன்னும் அதே பூம் பூம் அப்ரிடி தான்.. என்ன ஸ்ட்ரைக் ரேட் தெரியுமா?

பிளவு பற்றி கேட்டேன்

பிளவு பற்றி கேட்டேன்

அவர் கூறியதாவது: ரோகித்துக்கும், எனக்கும் இடையே பிளவு ஏற்பட்டு உள்ளதாக சொல்வது பற்றி நானும் கேட்டுள்ளேன். டிரெஸ்சிங் ரூமில் ஒரு வீரருடன் நாம் பழகும் விதத்தில் தான் வெற்றியின் முக்கிய பங்காக இருக்கும்.

முகம், உடல்மொழி

முகம், உடல்மொழி

இது உண்மையாக இருந்தால் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்க மாட்டோம். எனக்கு ஒருவரை பிடிக்கவில்லையென்றால் முகம், உடல்மொழியில் தெரிந்து விடும். நான் ரோகித்தை எப்போதும் பாராட்டி தான் உள்ளேன்.

குழப்பமான விஷயம்

குழப்பமான விஷயம்

ஏனென்றால் அவரை நான் முழுமையாக நம்புகிறேன். எங்களுக்கு இடையே எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒருவித குழப்பமான விஷயம், இவற்றால் யாருக்கு பயன் தான் என்று எனக்கு தெரியவில்லை. இதுபோன்ற பொய்யான செய்திகள் வெளியாகும் போது ஒரு வீரராகவும், அணியாகவும் குழப்பம் ஏற்படுகிறது. இது நம்பமுடியாததாக உள்ளது.

எப்படி விளையாட முடியும்?

எப்படி விளையாட முடியும்?

அணிக்குள் இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால் எப்படி எங்களால் சீராக விளையாடி வர முடியும்? 7வது இடத்திலிருந்து முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம். அணியில் சகோதரத்துவமும், நட்பும் இல்லையென்றால் இந்த உயரத்தை அடைந்திருக்க முடியாது என்றார்.

Story first published: Monday, July 29, 2019, 20:24 [IST]
Other articles published on Jul 29, 2019
English summary
Skipper virat kohli denies rift with rohit sharma.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X