For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலிக்கு என்ன பண்ணணும் என்று நல்லா தெரியும்..!! ‘அந்த’ போட்டோவை ரிலீஸ் செய்த பிசிசிஐ

புளோரிடா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்த கேப்டன் கோலிக்கு புளோரிடா மைதானத்தில் ரசிர்கள் கொடுத்த வரவேற்பு, இணையத்தில் டிரெண்டாகி இருக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் வெளியேறிய இந்தியா, தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் களமிறங்குகிறது. ஆகஸ்ட் 3ம் நாள் துவங்கி செப்டம்பர் 3 வரையான இந்த சுற்று ப்பயணத்தில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.

கோலி இந்த மூன்று தொடர்களுக்கும் கேப்டனாக செயல்படுகிறார். ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் துணை கேப்டனாகவும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அஜிங்க்யா ரகானே துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிசலுக்கு காரணம்

விரிசலுக்கு காரணம்

முன்னதாக தனக்கும், ரோகித்துக்கும் விரிசல் இருப்பதாகவும், யார் கேப்டன் என்ற எண்ணமே அதற்கு காரணம் என்றும் தகவல்கள் பரவின. இன்னும் சொல்ல போனால் அனுஷ்காவின் தலையீடே இந்த பிரச்னையை வலுவாக்க மிக முக்கிய காரணம் என்றும் பரவின.

புளோரிடாவில் கோலி

புளோரிடாவில் கோலி

பிரச்னைகள், வதந்திகள் என ஒரு பக்கம் இருந்தாலும் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் கலந்து அமெரிக்காவின் புளோரிடாவுக்கு பறந்து விட்டது. முதல் டி 20ல் ஆடுவதற்கான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பதற்காக புளோரிடா மைதானத்துக்கு வந்த கோலியை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.

பிசிசிஐ பதிவு

பிசிசிஐ பதிவு

ரசிகர்களுடன் செல்பி எடுத்துக கொண்ட கோலி, அவர்களின் டி ஷர்ட்டிலும், தொப்பிகளிலும் ஆட்டோகிராப் போட்டார். இதுபற்றி பிசிசிஐ தனது ட்விட்டரில், ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறது.

கோலிக்கு தெரியும்

தமது ரசிகர்களிடையே எப்படி சிரித்து உற்சாகமூட்ட வேண்டும்? தானும் மகிழ்ந்து, அவர்களிடமும் சிரிப்பை எப்படி உண்டாக்க வேண்டும் என்று கோலிக்கு நன்றாக தெரியும் என்று பிசிசிஐ அந்த செய்தியில் பதிவிட்டுள்ளது.

Story first published: Friday, August 2, 2019, 17:35 [IST]
Other articles published on Aug 2, 2019
English summary
Skipper virat kohli received a warm welcome by fans in florida.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X