For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆபத்தை உணராத பிசிசிஐ.. இளம் வீரர்கள் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க்.. இப்படி ஒரு மேட்ச் தேவைதானா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது பாகிஸ்தானில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற ஆபத்து அல்ல. இது நமக்கு நாமே ஏற்படுத்திய ஆபத்து..என்ன என்று விரிவாக பார்க்கலாம்!

அந்த 3 போட்டிகள்..சர்ச்சை, பரபரப்பு, சுவாரஸ்யம்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையே உள்ள பங்காளி பகைஅந்த 3 போட்டிகள்..சர்ச்சை, பரபரப்பு, சுவாரஸ்யம்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையே உள்ள பங்காளி பகை

யாருக்கு ஆபத்து?

யாருக்கு ஆபத்து?

சையது முஸ்தாக் அலி டி-20 கிரிக்கெட் தொடரின் நாக் அவுட் சுற்றுகள் நாளை முதல் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த தொடரில் ருத்துராஜ் கெய்க்வாட், கேதர் ஜாதவ்,உமேஷ் யாதவ்,தேவ்டட் படிக்கல், கருண் நாயர், சேத்தன் சக்காரியா, மணிஷ் பாண்டே,மாயங் அகர்வால், தமிழக வீரர்கள் நடராஜன், விஜய் சங்கர் உள்ளிட்ட இந்தியாவின் இன்றைய, நாளைய நட்சத்திரங்கள் பலர் விளையாடுகின்றனர்.

 டெல்லியில் அபாயம்:

டெல்லியில் அபாயம்:

இந்த நிலையில் டெல்லியில் காற்றின் மாசு அளவு அபாயகர கட்டத்தை தாண்டியுள்ளதால் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை, அரசு அதிகாரிகள் வீட்டிலேயே பணிபுரிய அனுமதி என அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 20,30 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் புகைக்கும் அளவு காற்றின் மாசு அதிகமாக உள்ள நிலையில், கிரிக்கெட் போட்டியை இங்கு நடத்தினால் வீரர்கள் உடல் நிலை என்னவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கோரிக்கை

கோரிக்கை

இந்த ஆபத்தை உணர்ந்த பலர் கிரிக்கெட் போட்டியை டெல்லியிலிருந்து, வேறு இடத்திற்கு மாற்ற பி.சி.சி.ஐ.க்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், பி.சி.சி.ஐ. இந்த கோரிக்கையை காதில் வாங்கவே இல்லை. இளம் வீரர்கள் பலர் பெரிய ரிஸ்க் எடுத்துள்ளனர். கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டப்படி டெல்லியில் நடந்தால் வீரர்களின் உடல் நலம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.

Recommended Video

IPL கண்டிப்பா வேண்டும்.. ஓய்வுக்கு பின் Ravi Shastri பரபரப்பு பேட்டி
கொரோனா:

கொரோனா:

ஏற்கனவே நுரையீரலை தாக்கக் கூடிய கொரோனா நோய்க்கு நடுவில் தான் வீரர்கள் விளையாடுகின்றனர்.இதில் ருத்துராஜ் கெய்க்வாட், வருண் சக்கரவர்த்தி,சாஹா உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா ஏற்கனவே வந்து சென்றுவிட்டது. தற்போதைய சூழலில் வீரர்கள் விளையாடினால் அவர்கள் நுரையீரல் பலவீனமாக மாறி எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.

Story first published: Monday, November 15, 2021, 19:34 [IST]
Other articles published on Nov 15, 2021
English summary
Indian Players playing with danger as Air pollution worsens in Delhi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X