கையை உடைக்க இங்கிலாந்து பிளான்… !! களத்தில் நடந்தது என்ன? ஸ்டீவ் ஸ்மித் வெளியிட்ட பகீர் தகவல்..!

ஓல்டு டிராபோர்டு: இங்கிலாந்து பவுலர்கள் என் கையை பதம் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் பந்துகளை வீசியதாக ஸ்டீவவ் ஸ்மித் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.

கேப்டன்சி பறிப்பு... ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாட தடை... என ஒட்டு மொத்தமாக இனி கிரிக்கெட்டே இல்லை என்ற நிலைக்கு போனவர் ஸ்டீவ் ஸ்மித். ஆனால், அதை எல்லாம் கடந்து, தற்போது சாதனை நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுவும் அவ்வளவு எளிதான சாதனை அல்ல. தடை முடிந்து டெஸ்ட் விளையாட வந்த மூன்று வாரங்கள் ஆகிறது. 4 இன்னிங்ஸ்கள் தான். சாதனையின் உச்சாணி கொம்பில் தமது திறமையால் ஏறி உட்கார்ந்து இருக்கிறார்.

4 வருஷமா குப்பை அள்ளுனேன்.. காசு சேர்த்தேன்.. ஆசை நிறைவேறிடுச்சு.. நெகிழ வைத்த 12 வயது சிறுவன்!

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

அப்படிப்பட்ட ஒருவர், இங்கிலாந்து அணி மீது ஒட்டுமொத்த குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருக்கிறது. அதனால் கிரிக்கெட் உலகமே அதிர்ந்து கிடக்கிறது. ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 487 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

ஸ்மித் சாதனை

ஸ்மித் சாதனை

அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் 211 ரன்கள் குவித்து ஒரே அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சினை பின் தள்ளி முன்னேறினார். ஆர்ச்சரின் அந்த அடி, அதன் வலி மறைந்து போனாலும், அந்த சம்பவம் இனி மறக்கப்படாது என்றே சொல்லலாம்.

சிரமமாக இருந்தது

சிரமமாக இருந்தது

காயத்தில் இருந்து மீண்டு வந்து 3வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்து இங்கிலாந்தை அசர வைத்தார். போட்டி முடிந்த பின் ஸ்டீவ் ஸ்மித் கூறியது தான் அடுத்தக்கட்ட பரபரப்பு. அவர் கூறியதாவது: லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து பவுலர்கள் வீசிய பந்துகள் மேலே எகிறி வந்தது. அதனை எதிர்கொள்ள சிரமாக இருந்தது.

கையை பதம் பார்த்தது

கையை பதம் பார்த்தது

பெரும்பலான பந்துகள் ஸ்டம்ப்புகளை நோக்கி வரவில்லை. மாறாக, பவுன்சர்களாகவே பறந்து வந்தன. ஸ்டுவர்ட் பிராட் , நல்ல லென்த்தான பந்துகளை வீசி நிறைய இன்சைடு எட்ஜுகளை வாங்க வைத்தார். அவருடைய பந்துகள் ஆரம்ப கட்டத்தில் எதிர்கொள்ள சிரமமாக இருந்தது. பெரும்பாலான பந்துகள் கையை பதம் பார்த்தது.

மிக்க மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி

ஹெட்டிங்கிலே டெஸ்டில் பங்கேற்காதது மிகவும் வருத்தம் அளித்தது. ஆனால் அடுத்து வரக்கூடிய நாட்களில் என்னை நானே முழுமையாக தயார்படுத்திக் கொண்டேன். அதுவே நான் மீண்டெழ காரணம். இப்போது இரட்டை சதம் அடித்திருக்கிறேன். அது மிக்க மகிழ்ச்சி என்றார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Smith accused england bowler stuart broad bowled sharp bouncers to break my hands.
Story first published: Friday, September 6, 2019, 22:44 [IST]
Other articles published on Sep 6, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more