For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்மித், சச்சினை விட விராட் கோலி தான் சூப்பர்... அவர அடிச்சிக்க முடியாது.. பீட்டர்சன்

லண்டன் : ஸ்டீவ் ஸ்மித், சச்சின் டெண்டுல்கரை விட இந்திய கேப்டன் விராட் கோலியே அனைத்துவகையிலும் சிறப்பானவர் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

வாட்சன் தான் எப்பவும் பெஸ்ட்... பாராட்டிய முன்னாள் வீரர்கள்

சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து முறியடித்து வருபவர் விராட் கோலி, அதனால் அவரே சிறப்பானவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்ஸ்டா லைவ் சாட்டில் முன்னாள் ஜிம்பாப் வீரர் பொம்மி ம்பாங்வாவுடன் பீட்டர்சன் மேற்கொண்ட நேரலையில் இவ்வாறு கூறியுள்ளார்.

கடைசி நேரத்தில் சச்சின் சொன்ன ஐடியா.. ஒப்புக் கொண்ட தோனி.. 2011 உலகக்கோப்பை பைனல் பரபரப்பு!கடைசி நேரத்தில் சச்சின் சொன்ன ஐடியா.. ஒப்புக் கொண்ட தோனி.. 2011 உலகக்கோப்பை பைனல் பரபரப்பு!

இந்திய கேப்டன் விராட் கோலி

இந்திய கேப்டன் விராட் கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார். இவரது தலைமையின்கீழ் இந்திய அணி பல்வேறு வெற்றிகளை வித்து வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் அவர்களை வெற்றி கொண்டது சிறந்த சாதனையாக உள்ளது. இவர் மூன்று வடிவங்களிலும் விளையாடி 50 புள்ளிகளை சராசரியாக பெற்று சர்வதேச அளவில் 70 சதங்களை குவித்துள்ளார்.

முதலிடங்களில் ஸ்மித், கோலி

முதலிடங்களில் ஸ்மித், கோலி

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி இருவரும் தற்போது கிரிக்கெட் உலகின் முன்னணி வீரர்களாக உள்ளனர். ஸ்மித் 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 7227 ரன்களை குவித்து 62.74 சராசரியில் உள்ளார். கோலியோ 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7240 ரன்களை குவித்துள்ளார். இதேபோல, ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 வடிவங்களில் 59.33 மற்றும் 50.80 சராசரிகளை விராட் கோலி பெற்றுள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 42.46 மற்றும் 29.60 சராசரிகளை பெற்றுள்ளார்.

விராட்டை பாராட்டிய முன்னாள் வீரர்

விராட்டை பாராட்டிய முன்னாள் வீரர்

இந்நிலையில், சாதனைகளை முறியடிக்கும் வேகம், மிகுந்த நெருக்கடிகளுக்கு இடையில் அணியில் வெற்றிகளை குவிப்பது போன்ற விராட் கோலியின் திறமைகளுக்கு முன்னால் ஸ்டீவ் ஸ்மித் அவரது அருகில் கூட வரமுடியாது என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். இன்ஸ்டா லைவ் சாட்டில் முன்னாள் ஜிம்பாப்வே வீரர் பொம்மி ம்பாங்வாவுடன் மேற்கொண்ட நேரலையில் அவர் இவ்வாறு கூறினார்.

சாதனைகளை முறியடிக்கும் விதம்

சாதனைகளை முறியடிக்கும் விதம்

மீண்டும் விராட் கோலி சச்சினின் சாதனைகளை முறியடித்ததே இங்கு நினைத்துப்பார்க்கப்பட வேண்டியது. ஏறக்குறைய 80க்கும் மேற்பட்ட சாதனைகளை விராட் முறியடித்து சாதனை நாயகனாக திகழ்கிறார் என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இது மிகுந்த வியப்புக்கு உரியது என்று தெரிவித்துள்ள அவர், சச்சினைவிட விராட் கோலியே இதில் சிறப்பானவர் என்று கூறியுள்ளார்.

Story first published: Sunday, May 17, 2020, 11:00 [IST]
Other articles published on May 17, 2020
English summary
Indian skipper even better than Sachin Tendulkar: Pietersen
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X