For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்பாடா… ஒரு வழியா உலக கோப்பைக்கான ஆஸி. அணி அறிவிப்பு…. வார்னர், ஸ்மித் ரிட்டர்ன்ஸ்

மெல்போர்ன்: இதோ... அதோ என்று எதிர்பார்த்த ஆஸ்திரேலியா அணி, உலக கோப்பைக்கான அணியை அறிவித்திருக்கிறது. டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் அணிக்கு திரும்புகின்றனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது. மொத்தம் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 48 போட்டிகள், 12 நகரங்களில் நடக்கிறது. 1992ல் பென்சன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி இத்தொடர் நடக்கவுள்ளது.

ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படி பங்கேற்கின்றன. மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யபட்டுள்ளன.

ஜோராக ஆரம்பித்து.. பேஜாராக முடித்த ஹைதராபாத்... 116 ரன்களில் மடமடவென்று சரிந்து தோல்வி ஜோராக ஆரம்பித்து.. பேஜாராக முடித்த ஹைதராபாத்... 116 ரன்களில் மடமடவென்று சரிந்து தோல்வி

உலக கோப்பை முதல் போட்டி

உலக கோப்பை முதல் போட்டி

தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. போட்டிக்கு முன்பாக, உலக கோப்பைக்கான துவக்க விழாவை பிரமாண்டமாக நடக்க உள்ளது.

ஆஸி. அணி அறிவிப்பு

ஆஸி. அணி அறிவிப்பு

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. பந்தை சேதப்படுத்தி, ஓராண்டு தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டனர். பின்ச் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முழு விவரம்

முழு விவரம்

அணி விவரம்: ஆரோன் பின்ச் (கேப்டன்), ஜேசன் பெஹண்டிராப், அலெக்ஸ் காரே (விக்கெட் கீப்பர்), நாதன் கூல்டர் நைல், பாட் கம்மின்ஸ், உஸ்மான் கவாஜா, நாதன் லயான், ஷான் மார்ஷ், கிளன் மேக்ஸ்வெல், ஜய் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

உலக தரமான வீரர்கள்

உலக தரமான வீரர்கள்

இது தொடர்பாக ஆஸ்திரேலிய தேர்வுக் குழுத் தலைவர் ட்ரேவோர் ஹோன்ஸ் கூறியிருப்பதாவது: வார்னர், மற்றும் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்குத் திரும்புகின்றனர். 2 பேரும் உலக தரமான வீரர்கள். ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வருகின்றனர் என்றார்.

அணியில் இல்லை

அணியில் இல்லை

வார்னர், ஸ்மித் வருகை... ஹேண்ட்ஸ் கோம்பை பாதித்துவிட்டது. இந்திய தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல பார்மில் இருக்கும் அவரால் அணியில் தனது இடத்தை தக்க வைக்க முடியவில்லை.

நிச்சய மாற்றம்

நிச்சய மாற்றம்

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி, மிகச் சரியான நேரத்தில் ஆஸ்திரேலிய அணி பார்முக்கு வந்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்மித் மற்றும் வார்னர் வருகை அந்த அணிக்கு நிச்சயம் மாற்றமாகவே கருதப்படும்.

Story first published: Monday, April 15, 2019, 10:40 [IST]
Other articles published on Apr 15, 2019
English summary
Smith, Warner named in Australia World Cup squad.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X