For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மைதானத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு.. இந்தியா,தென்னாப்பிரிக்கா ஆட்டம் நிறுத்தம்.. பதறிய வீரர்கள்

கவுகாத்தி : இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நடைபெற்ற போது, பாம்பு புகுந்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

Recommended Video

IND vs SA 2nd T20 போட்டியின் நடுவே பாம்பு புகுந்ததால் பரபரப்பு

ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டு பார்த்தி இருப்போம். ஆனால் பாம்பால் ஆட்டம் நிறுத்தப்பட்டு நம் வாழ்க்கையில் முதல் முறையாக இப்போது தான் பார்த்து இருப்போம்.

மைதானத்தில், நாய் புகுந்து அதனை மைதான ஊழியர்கள் துரத்திய சம்பவம் எல்லாம் நடைபெற்று இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் - இந்திய அணி அறிவிப்பு.. ஆர்சிபி வீரருக்கு வாய்ப்புதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் - இந்திய அணி அறிவிப்பு.. ஆர்சிபி வீரருக்கு வாய்ப்பு

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கேஎல் ராகுல் பவுண்டரி களை விரட்டி ரன்களை குவித்தார். இதே போன்று ரோகித் சர்மாவும் தனது 400வது டி20 போட்டியில் பட்டையை கிளப்பினார்.

மைதானத்தில் பாம்பு

மைதானத்தில் பாம்பு

இந்திய அணி பவர்பிளே முடிவில் 57 ரன்கள் சேர்த்தது. அப்போது ஆட்டத்தின் 7வது ஓவர் முடிவில் கேஎல் ராகுல் ஏதோ, மைதானத்தில் நகர்ந்து வந்ததை பார்த்தார். உடனே அது பாம்பு என்பதை அறிந்த ராகுல், உடனடியாக தென்னாப்பிரிக்க வீரர்களை எச்சரித்து, அங்கிருந்து நகர சொன்னார்.

ஊழியர்கள் விரைந்தனர்

ஊழியர்கள் விரைந்தனர்

உடனடியாக நடுவர்கள், மைதான ஊழியர்களை வர வழைத்தனர். பாம்பை கண்டால் படையே நகரும் என்று சொல்வார்கள். அதே போல், பாம்பை பிடிக்க ஒரே படையே மைதானத்திற்குள் வந்தது. ஆனால் உடனடியாக பாம்பை பிடித்த ஊழியர்கள் அதனை ஒரு பிளாஸ்டிக் வாலியில் போட்டு மைதானத்தை விட்டு அப்புறப்படுத்தினர்.

பாதுகாப்பு குறைபாடு

பாதுகாப்பு குறைபாடு

தனது வாழ்க்கையில் கிரிக்கெட் மைதானத்திற்குள் பாம்பு வந்து பார்த்தது இல்லை என்று தென்னாப்பிரிக்க வாண்னையாளர் பமிங் பங்வா கூறினார்.இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஹர்சா போக்லே, பாம்பை இப்போது தான் களத்தில் பார்க்கிறேன். ஆனால், ஏற்கனவே ஒரு பாம்பு வந்ததாக தெரிவித்துள்ளார். பாம்பு மைதானத்தில் இருப்பதால் வீரர்களின் பாதுகாப்பும், ரசிகர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருக்கிறது. பாம்பை பார்த்த ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

Story first published: Sunday, October 2, 2022, 21:11 [IST]
Other articles published on Oct 2, 2022
English summary
Snake entered in ind vs Sa t20 game in guwhati as game stops play மைதானத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு.. இந்தியா,தென்னாப்பிரிக்கா ஆட்டம் நிறுத்தம்.. பதறிய வீரர்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X