For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"டாம் லாதம்".. இந்திய ரசிகர்கள் இப்போது அதிகம் விரும்பும் பெயர்.. ஏன் தெரியுமா?

மும்பை: ஆம்! உண்மையில் பல தீவிர இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது விரும்பும் பெயர் இவர் தான். காரணம் என்னவென்று பார்ப்போம்.

வரும் ஜூன் 18ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.

Porche 911 முதல் Hellcat X132 வரை.. மிரட்டும் தோனியின் கலெக்‌ஷன்.. அதிக விலைமதிப்புடைய 5 வாகனங்கள்! Porche 911 முதல் Hellcat X132 வரை.. மிரட்டும் தோனியின் கலெக்‌ஷன்.. அதிக விலைமதிப்புடைய 5 வாகனங்கள்!

இதற்காக சவுத்தாம்ப்டனில் போட்டி நடைபெறும் மைதானத்தின் ஹோட்டலில் இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவ்வப்போது, தனித்தனியாக சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 தனி ஆளாக அதகளம்

தனி ஆளாக அதகளம்

அதேசமயம், நியூசிலாந்து அணியோ இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதுவும், லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் கம்பீரமாக டிரா செய்துள்ளது நியூசி. குறிப்பாக, அறிமுக வீர்ர் டெவோன் கான்வே, முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்து மிரட்டிவிட்டார். கேப்டன் கேன் வில்லியம்சன் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 20 ரன்கள் கூட அடிக்காத நிலையில், தனி ஆளாக நின்று அதகளப்படுத்தினார் கான்வே.

 வில்லியம்சன் ரெஸ்ட்

வில்லியம்சன் ரெஸ்ட்

இந்த சூழலில் தான், இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூன்.10) பிர்மிங்கமில் நடைபெறுகிறது. விஷயத்துக்கே இப்போது தான் வருகிறோம். இப்போட்டியில் காயம் காரணமாக கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியிருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியின் போது, அவருக்கு இடது முழங்கையில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகவில்லை. நாளை 2வது போட்டி தொடங்கும் நிலையில், எப்படியாவது சகஜ நிலைமைக்குதிரும்பிவிடலாம் என கடந்த நான்கு நாட்களாக காத்திருந்த வில்லியம்சனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 டாம் லாதம்

டாம் லாதம்

அவரது முழங்கையில் தொடர்ந்து வலி நீடிக்க, இப்போது அங்கு ஊசி போடப்பட்டுள்ளது. இதனால் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இதுகுறித்து பேசிய நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர், இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகும் விதமாகவே அவர் இப்போட்டியில் இருந்து விலகியிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த போட்டியின் கேப்டனாக டாம் லாதம் செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளார்.

 ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஒருவேளை, தொடர்ந்து காயம் குணமடையாத பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு கேன் வில்லியம்சன் விளையாட முடியாத நிலை உருவாகலாம். அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், அந்த போட்டிக்கும் டாம் லாதம் தான் செயல்படுவார். உலகின் நம்பர்.1 டெஸ்ட் வீரர் கேன் வில்லியம்சன் விளையாடாமல் போனால், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிடும் என்பதால் தீவிர இந்திய ரசிகர்கள் சிலர், டாம் லாதமே நியூசிலாந்து கேப்டனாக செயல்படும் சூழல் உருவாக வேண்டும் என்று சமூக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Story first published: Wednesday, June 9, 2021, 21:23 [IST]
Other articles published on Jun 9, 2021
English summary
crazy indian fans tom latham to lead nz - கேன் வில்லியம்சன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X