For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா -பாகிஸ்தான் போட்டி நடக்க கங்குலிதான் உதவி செய்யனும்

இஸ்லாமாபாத் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடைபெற பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2004ல் பாகிஸ்தானில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிசிசிஐ தயக்கம் காட்டியபோது, அப்போதைய இந்திய கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலி அதை செயல்படுத்தியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

பாகிஸ்தானில் பத்தாண்டுகளுக்கு பிறகு தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நடத்த பிசிபி ஆர்வம் காட்டி வருகிறது. இதையொட்டி சமீபத்தில் இலங்கை அணி அங்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தனித்து விடப்பட்ட பாகிஸ்தான்

தனித்து விடப்பட்ட பாகிஸ்தான்

கடந்த 2009ல் இலங்கை வீரர்களை குறிவைத்து பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து, அங்கு கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவில்லை

10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட்

10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட்

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான், தங்களது நாட்டில் மற்ற நாடுகள் டெஸ்ட் போட்டிகளை விளையாட அழைப்பு விடுத்து வருகிறது.

முன்னாள் கேப்டன் கோரிக்கை

முன்னாள் கேப்டன் கோரிக்கை

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உதவிபுரிய வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்திப் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிசிபிக்கு உதவ வேண்டுகோள்

பிசிபிக்கு உதவ வேண்டுகோள்

இந்தியா -பாகிஸ்தான் அணியினரின் போட்டிகள் உலக அளவில் மிகுந்த விருப்பத்திற்குரிய ஒன்றாக இருந்துள்ளது. இந்நிலையில் அதை மீண்டும் நடத்த பிசிபி மற்றும் அதன் தலைவருக்கு கங்குலி உதவவும் லத்தீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லுறவு மீட்கப்படும் -லத்தீப்

நல்லுறவு மீட்கப்படும் -லத்தீப்

இந்தியா -பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டால் மட்டுமே இருநாடுகளுக்கிடையிலான நல்லுறவு பாதுகாக்கப்படும் என்றும் லத்தீப் தெரிவித்துள்ளார்.

"உலகமே காத்திருக்கிறது"

மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகளை காண்பதற்காக உலக அளவில் ரசிகர்கள் காத்திருப்பதாகவும் லத்தீப் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம்

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம்

கடந்த 2004ல் பாகிஸ்தானில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிசிசிஐ தயக்கம் காட்டிய நிலையில், அதை செயல்படுத்தி காட்டியவர் அப்போது கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலி என்பதையும் லத்தீப் சுட்டிக் காட்டினார்.

Story first published: Friday, January 3, 2020, 19:38 [IST]
Other articles published on Jan 3, 2020
English summary
Former Pakistan Captain request to resume India -Pakistan matches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X