For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிசிசிஐ-க்கு இனி புதிய தலைவர்??.. தேர்தலில் பின் வாங்கும் சவுரவ் கங்குலி.. ரோஜர் பின்னிக்கு வாய்ப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தேர்தலில் நீடிக்க சவுரவ் கங்குலிக்கு விருப்பம் இல்லை எனத்தகவல் வெளியாகியுள்ளது.

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி மற்றும் செயலாளராக ஜெய் ஷா கடந்த 2019ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டனர்.

இவர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதால் புதிய தலைவர்களுக்கான தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன.

அப்படியே தோனியின் சாயல்.. முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சம்பவம்.. பிசிசிஐ-க்கு தரமான பதிலடி அப்படியே தோனியின் சாயல்.. முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சம்பவம்.. பிசிசிஐ-க்கு தரமான பதிலடி

பிசிசிஐ-ன் தேர்தல்

பிசிசிஐ-ன் தேர்தல்

வரும் அக்டோபர் 13ம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அக்டோபர் 14ம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாளாகும். தேர்தல் வரும் அக்டோபர் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ உயர் பதவிகளில் 6 வருடங்களுக்கு மேல் இருப்பவர்கள் மீண்டும் போட்டியிட முடியாது என்ற விதி இருந்தது. ஆனால் அந்த முறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால் கங்குலி மற்றும் ஜெய்ஷா மீண்டும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

சவுரவ் கங்குலி விலகல்

சவுரவ் கங்குலி விலகல்

இந்நிலையில் பிசிசிஐ தேர்தலில் சவுரவ் கங்குலி நிற்கபோவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கங்குலி, ஜெய் ஷா உள்ளிட்ட பல பிரமூகர்கள் இடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கங்குலி தேர்தலில் நிற்க வேண்டாம் எனவும், ஜெய் ஷா மீண்டும் செயலாளர் பதவிக்கு போட்டியிடப்போவதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஐசிசி தான்.

 என்ன காரணம்

என்ன காரணம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-ன் தலைவர் பதவிக்கான தேர்தலும் விரைவில் வரவுள்ளது. எனவே இந்தியாவின் சார்பில் சவுரவ் கங்குலியை அந்த பதவிக்கான தேர்தலில் நிற்கவைக்க முடிவெடுத்துள்ளனர். பிசிசிஐ-க்கு அதிக ஆதரவு இருக்கும் என்பதால் கங்குலி வெற்றி பெறுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

அடுத்த தலைவர்

அடுத்த தலைவர்

இது ஒருபுறம் இருக்க, கர்நாடக கிரிக்கெட் வாரிய தலைவரான ரோஜர் பின்னி, பிசிசிஐன் அடுத்த தலைவராக அதிக வாய்ப்புள்ளது. கங்குலிக்கு அடுத்தபடியாக இந்த தேர்தலில் அதிக ஆதரவு உள்ளவராக இருப்பது ரோஜர் பின்னி தான். இவர் 1979ல் இருந்து 1987 வரை இந்திய அணிக்காக விளையாடியவர் ஆகும்.

Story first published: Friday, October 7, 2022, 12:46 [IST]
Other articles published on Oct 7, 2022
English summary
Sourav Ganguly likely to giving up on BCCI President post in elections, Roger Binny is a contender
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X