For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிசிசிஐ தலைவர் ஆனார் கங்குலி.. குருவின் வழியில் அதிகாரத்தைப் பிடித்த சிஷ்யன்!

Recommended Video

Sourav Ganguly takes over as 39th BCCI president | பிசிசிஐ தலைவர் ஆனார் கங்குலி

மும்பை : அக்டோபர் 23 அன்று கங்குலி அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ தலைவர் ஆனார். சுமார் 65 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் பிசிசிஐ தலைவர் பதவியில் அமர்ந்துள்ளார்.

பிசிசிஐ தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கங்குலி மட்டுமே மனுத் தாக்கல் செய்தார். அதை அடுத்து அவருக்கு பிசிசிஐ பொதுக் குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக தலைவர் பதவி வழங்கப்பட்டது.

தன் ஆதர்ச குரு ஜக்மோகன் டால்மியா வழியில் பிசிசிஐ தலைவர் ஆகி இருக்கிறார் கங்குலி.

தேர்தல் நடந்தது

தேர்தல் நடந்தது

கடந்த இரு ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிசிசிஐ, தன் விதிகளை மாற்றி அமைத்து தனியாக செயல்பட உள்ளது. அதற்காக தலைவர் மற்றும் பிற பதவிகளுக்கு புதிதாக தேர்தல் நடத்தப்பட்டது.

ஒரு பதவிக்கு ஒருவர்

ஒரு பதவிக்கு ஒருவர்

இந்த முறை தேர்தலில் போட்டி வேண்டாம் என முடிவெடுத்த பிசிசிஐ அதிகாரக் குழுக்கள், தங்களுக்குள் பேசி முடிவெடுத்து ஒவ்வொரு பதவிக்கும் ஒரு நபரை மட்டுமே மனுத் தாக்கல் செய்வது என்றார் முடிவுக்கு வந்தனர்.

கங்குலி தலைவர்

கங்குலி தலைவர்

அதன் அடிப்படையில் அனைவரும் ஒப்புக் கொள்ளும் கங்குலியை பிசிசிஐ தலைவர் பதவியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டது. கடந்த வாரம் திங்கள் அன்று கங்குலி பிசிசிஐ தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்தார். வேறு யாரும் தேர்தலில் போட்டியிடாத நிலையில், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டத்தில் அறிவிப்பு

கூட்டத்தில் அறிவிப்பு

அக்டோபர் 23 அன்று நடந்த பிசிசிஐ பொதுக் குழு கூட்டத்தில் அவர் பிசிசிஐ தலைவராக அறிவிக்கப்பட்டார். கங்குலி பிசிசிஐ-யின் 39வது தலைவர் ஆவார். அடுத்த பத்து மாதங்களுக்கு கங்குலி பிசிசிஐ தலைவராக செயல்படுவார்.

குரு வழியில் கங்குலி

குரு வழியில் கங்குலி

கங்குலியின் குருவாக கருதப்படும் முன்னாள் பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா இறந்த பின் பெங்கால் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஆனார் கங்குலி. தற்போது, டால்மியா இருந்த பிசிசிஐ தலைவர் பதவியிலும் கங்குலி அமர்ந்து இருக்கிறார்.

பல பிரச்சனைகள்

பல பிரச்சனைகள்

தற்போது பிசிசிஐ புதிய பாதையில் செல்ல இருக்கும் நிலையில், பல ஐசிசி முதல் உள்ளூர் கிரிக்கெட் வரை பல்வேறு பிரச்சனைகளை கங்குலி எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

அதிரடி செயல்பாடு

அவர் பாணியில் அதிரடியாக செயல்பட்டு பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி களத்தில் கோலோச்சி வரும் நிலையில், அதிகாரத்தில் பிசிசிஐ உலகளவில் கங்குலி தலைமையில் கோலோச்சும்.

Story first published: Wednesday, October 23, 2019, 12:12 [IST]
Other articles published on Oct 23, 2019
English summary
Sourav Ganguly officially announced as BCCI president. He is following his Guru Jagmohan Dalmia in administration.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X