தினேஷ் கார்த்திக்கின் உலகக்கோப்பை வாய்ப்பு... மௌனம் கலைத்த கங்குலி.. ராகுல் டிராவிட் பலே திட்டம்!

மும்பை: டி20 உலகக்கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைக்குமா என்பது குறித்து சவுரவ் கங்குலி மறைமுகமாக பதிலளித்துள்ளார்.

Dinesh Karthik T20 உலக கோப்பை வாய்ப்பு? Dravid பலே திட்டம்! | *cricket

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் தினேஷ் கார்த்திக் கம்பேக் கொடுத்துள்ளது தான் தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.

தினேஷ் கார்த்திக்கிற்கு மதுரையில் நிகழ்ந்த அதிசயம்..! இந்திய அணிக்கு திரும்பியதன் பின்னணி!!தினேஷ் கார்த்திக்கிற்கு மதுரையில் நிகழ்ந்த அதிசயம்..! இந்திய அணிக்கு திரும்பியதன் பின்னணி!!

தினேஷின் கம்பேக்

தினேஷின் கம்பேக்

ஐபிஎல் தொடரில் கலக்கிய தினேஷ் கார்த்திக், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இதுவரை நடைபெற்றுள்ள 4 போட்டிகளிலும், களமிறங்கியுள்ளார். அதில் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். 2வது போட்டியில் 30 (12), 4வது போட்டியில் 55 (27) என குவித்துள்ளார்.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

இதனால் தினேஷ் கார்த்திக் ஆசைப்பட்டது போலவே டி20 உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைத்துவிடுமா? ரோகித், விராட் போன்ற வழக்கமான வீரர்கள் வந்தவுடன் தினேஷ் கார்த்திக்கை கழட்டிவிட மாட்டார்களே? என பல்வேறு கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சவுரவ் கங்குலி பதில்

சவுரவ் கங்குலி பதில்

இந்நிலையில் அதற்கெல்லாம் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார். அதில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை தேர்வு செய்ய, ராகுல் டிராவிட் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதாவது, டி20 உலகக்கோப்பைக்காக அவர் யோசித்து வைத்துள்ள வீரர்களுக்கு அவர் தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருகிறார். அக்டோபரில் நடக்கும் டி20 உலகக்கோப்பை வரை ஒரேமாதிரியான அணிதான் இருக்கும் என கங்குலி கூறினார்.

தினேஷின் நிலை என்ன

தினேஷின் நிலை என்ன

தினேஷ் கார்த்திக்கிற்கு, தென்னாப்பிரிக்க தொடரை தொடர்ந்து அயர்லாந்து தொடரிலும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதன் பின்னர் வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்க பெரிய வாய்ப்புகள் உள்ளன. எனவே ராகுல் டிராவிட்டின் உலகக்கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக் இருப்பது உறுதியாகியுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sourav ganguly on Dinesh karthik ( தினேஷ் கார்த்திக் குறித்து சவுரவ் கங்குலி ) தினேஷ் கார்த்திக்கின் டி20 உலகக்கோப்பை வாய்ப்பு குறித்து சவுரவ் கங்குலி மனம் திறந்துள்ளார்.
Story first published: Sunday, June 19, 2022, 14:21 [IST]
Other articles published on Jun 19, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X