For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கங்குலி : இந்த வீரர் தான் ஒரே தீர்வு.. அவர் யாருன்னு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.. நம்பவே மாட்டீங்க..!

மும்பை : இந்திய ஒருநாள் அணியில் பேட்டிங் வரிசையின் நான்காவது இடத்தில் எந்த பேட்ஸ்மேனை ஆடவைக்கலாம் என்பதில் தெளிவில்லாத சூழ்நிலை நிலவுகிறது.

இந்நிலையில், கங்குலி அந்த இடத்தில் ஆட சிறந்த வீரர் இவர் தான் என ஒரு வீரரின் பெயரைக் குறிப்பிட்டு ஷாக் கொடுத்துள்ளார். அந்த வீரர் யார்?

ஸ்டேடியத்துக்கு வெளியே படுத்து தூங்கி.. விடிய,விடிய காத்திருந்த ரசிகர்கள்.. எல்லாம் இதுக்கு தான் ஸ்டேடியத்துக்கு வெளியே படுத்து தூங்கி.. விடிய,விடிய காத்திருந்த ரசிகர்கள்.. எல்லாம் இதுக்கு தான்

பலர் சிரிக்கலாம்

பலர் சிரிக்கலாம்

இந்தியா டிவியின் கிரிக்கெட் விவாத நிகழ்ச்சியில் பேசிய கங்குலி, "இப்போது தான் சொல்வது பலருக்கு நம்ப முடியாததாக இருக்கும். பலர் நான் கூறுவதை கேட்டு சிரிக்கலாம்" என முதலில் பில்டப் கொடுத்தார்.

நல்ல பேட்ஸ்மேன்

நல்ல பேட்ஸ்மேன்

"என்னைப் பொறுத்தவரை, ஒருநாள் போட்டிகளில் புஜாரா தான் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய சரியான வீரர். அவரது பீல்டிங் வேண்டுமானால் பலவீனமாக இருக்கலாம். ஆனால், அவர் நல்ல பேட்ஸ்மேன்" என்று புஜாரா குறித்து கூறினார் கங்குலி.

அதிர்ச்சி

அதிர்ச்சி

"நான் சொன்னதை கேட்டு பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், தரமான பேட்ஸ்மேன் வேண்டுமென்றால், ஏற்கனவே இந்தியா முயற்சி செய்த வீரர்களை விட திறமையான வீரர் வேண்டும் என்றால், புஜாரா தான் சிறந்த தேர்வு" என்றார் கங்குலி.

ராகுல் டிராவிட் போல..

ராகுல் டிராவிட் போல..

முன்பு ராகுல் டிராவிட் இந்திய ஒருநாள் அணியில் என்ன செய்தாரோ அதை புஜாரா செய்வார் என நம்புகிறேன் என கங்குலி தெரிவித்தார். ஒருநாள் அணியில் நிலையான வீரர் வேண்டுமென்றால் புஜாரா தான் சரியான தீர்வு என்றார்.

டெஸ்ட் வீரர் புஜாரா

டெஸ்ட் வீரர் புஜாரா

புஜாரா தற்போது டெஸ்ட் அணியில் மட்டுமே ஆடி வருகிறார். சிலர் டெஸ்ட் போட்டியில் கூட அவர் பொறுமையாக ரன் குவிக்கிறார் என கூறி வரும் நிலையில், அவரை ஒருநாள் அணியில் ஆடவைக்கலாம் என கூறியுள்ளார் கங்குலி.

Story first published: Saturday, March 16, 2019, 13:05 [IST]
Other articles published on Mar 16, 2019
English summary
Sourav Ganguly says Cheteshwar Pujara can bat at No.4 in ODI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X