For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. வெடித்த ட்விட்டர் சர்ச்சை.. சமாளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி!

மும்பை : பிசிசிஐ தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற கங்குலி, ஒரு பேண்டசி கிரிக்கெட் விளையாட்டுக்கு விளம்பரம் செய்து சிக்கிக் கொண்டுள்ளார்.

ஐபிஎல் தொடருக்கு ட்ரீம்11 என்ற பேண்டசி கிரிக்கெட் விளையாட்டு முக்கிய விளம்பரதாரராக இருக்கும் நிலையில், அதற்கு போட்டி பேண்டசி கிரிக்கெட் விளையாட்டான மைசர்க்கிள்11 விளையாட்டுக்கு விளம்பரம் செய்துள்ளார் கங்குலி.

இந்த விவகாரம் வெடித்துள்ள நிலையில், அது என் தனிப்பட்ட விஷயம். இதில் எந்த பிரச்சனையும் இல்லை எனக் கூறி சமாளித்துள்ளார் கங்குலி.

தம்பி.. அதான் நீங்க பண்றது தெளிவா தெரியுதே.. மாட்டிக் கொண்ட இளம் வீரர்.. சாட்டையை சுழற்றிய ஐசிசி!தம்பி.. அதான் நீங்க பண்றது தெளிவா தெரியுதே.. மாட்டிக் கொண்ட இளம் வீரர்.. சாட்டையை சுழற்றிய ஐசிசி!

விளம்பரம் செய்யலாமா?

விளம்பரம் செய்யலாமா?

பிசிசிஐ தலைவர் இது போன்ற விளம்பரம் செய்யலாமா? என்பது ஒருபுறம் இருக்க, பிசிசிஐ-யுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் நிறுவனம் ஒன்றிற்கு போட்டியான நிறுவனத்துக்கு கங்குலி விளம்பரம் செய்யலாமா? என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது.

விளம்பர தூதராக இருந்தார்

விளம்பர தூதராக இருந்தார்

கங்குலி பிசிசிஐ தலைவர் ஆகும் முன் மைசர்க்கிள்11 விளையாட்டின் விளம்பர தூதராக இருந்தார். தன் சமூக வலைதளங்களில் அவ்வப்போது அந்த விளையாட்டுக்கு விளம்பரம் செய்யும் வகையில் பதிவுகளை பகிர்வார்.

விளம்பரப் பதிவு

விளம்பரப் பதிவு

இந்த நிலையில், அவர் பிசிசிஐ தலைவர் ஆன பின் சில காலம் எந்த விளம்பர பதிவும் காணப்படவில்லை. இந்தியா - வங்கதேசம் இடையே ஆன மூன்றாவது டி20க்கு முன்னதாக அந்த போட்டியை மையமாக வைத்து விளம்பரப் பதிவை பகிர்ந்தார் கங்குலி.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

அதைக் கண்ட ரசிகர்கள், கங்குலி பிசிசிஐ தலைவர் ஆன பின்னும் இந்த விளம்பரத்திற்கு தூதராக இருக்கிறாரா? என கேள்வி எழுப்பினர். இது பெரிய சர்ச்சையாக மாறியது. ஊடகங்களில் இந்த செய்தி வெளியானது.

இரட்டை ஆதாய சிக்கல்

இரட்டை ஆதாய சிக்கல்

ட்ரீம்11 விளையாட்டு பிசிசிஐ-யால் நடத்தப்படும் ஐபிஎல் தொடரின் முக்கிய விளம்பரதாரர் எனும் நிலையில், அதன் போட்டி விளையாட்டிற்கு கங்குலி விளம்பரம் செய்வது இரட்டை ஆதாயம் என ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பிசிசிஐ சார்ந்த பதிவு

பிசிசிஐ சார்ந்த பதிவு

அதாவது, கங்குலி பிசிசிஐ தலைவர் என்று ஆன பின் அவரது சமூக வலைதள பதிவையும் பிசிசிஐ சார்ந்த ஒன்றாகவே கருதி இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. ஆனால், கங்குலி இது என் தனிப்பட்ட விவகாரம் என கூறி இருக்கிறார்.

என் தனிப்பட்ட விஷயம்

என் தனிப்பட்ட விஷயம்

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த கங்குலி இந்த விவகாரம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். "இதில் எந்த இரட்டை ஆதாயமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது என் தனிப்பட்ட விஷயம்" என்றார் கங்குலி.

இரட்டை ஆதாயம் இல்லை

இரட்டை ஆதாயம் இல்லை

மேலும், "நான் ட்ரீம்11 குறித்து ட்வீட் போட்டு இருந்தால் தான் அது இரட்டை ஆதாயத்தின் கீழ் வந்திருக்கும். நான் பதிவிட்ட ட்வீட்டில் எந்த இரட்டை ஆதாயமும் இல்லை" என்றார் கங்குலி.

மீண்டும் நடந்தால் சிக்கல்

மீண்டும் நடந்தால் சிக்கல்

இப்போதைக்கு இந்த விவகாரம் முடிந்ததாகவே தெரிகிறது. எனினும், கங்குலி மீண்டும் விளம்பரம் செய்து சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்தால், அப்போது நிச்சயம் அது சர்ச்சையாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Thursday, November 14, 2019, 14:44 [IST]
Other articles published on Nov 14, 2019
English summary
Sourav Ganguly says promoting fantasy cricket is his personal thing and there is no conflict of interest.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X