For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மற்றொரு பால்கனி... மற்றொரு வலிமை... கங்குலிக்கு கிடைத்த விமர்சனம்

கொல்கத்தா : கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொல்கத்தாவில் உள்ள தன்னுடைய வீட்டில் தன்னுடைய நேரத்தை பயனுள்ளதாக செலவழித்து வருகிறார் பிசிசிஐ தலைவர் கங்குலி

Recommended Video

Raina compares Dhoni and Rohit Sharma's captaincy

இந்நிலையில் தன்னுடைய வீட்டில் சாய்ந்த மாமரத்தை மீண்டும் அதன் இடத்தில் பொருத்தும் நடவடிக்கையில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் அதிக வலிமை தேவைப்பட்டதாகவும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Sourav Ganguly Star Of Another Balcony, Another Show Of Strength

இந்நிலையில், இந்த டிவீட்டுக்கு பதிலளித்த ரசிகர் ஒருவர், மற்றொரு பால்கனி, மற்றொரு வலிமையான செயல் என்று கமெண்ட் செய்துள்ளார்.

கடந்த 2002 ஜூலை 13ம் தேதி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, யுவராஜ் சிங் மற்றும் முகமது கைப் இருவரும் இணைந்து அதிரடி காட்டி, இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றினர். இதையடுத்து, தன்னுடைய சட்டையை கழற்றிவிட்டு, லார்ட்ஸ் மைதானத்தை உற்சாகமாக சுற்றிவந்தார் கங்குலி.

விராட் கோலியை பிளான் பண்ணிதான் தூக்கணும்... பாட் கமின்ஸ் அதிரடிவிராட் கோலியை பிளான் பண்ணிதான் தூக்கணும்... பாட் கமின்ஸ் அதிரடி

அப்போது, இந்த செயல் மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளானது. சமீபத்தில்கூட இந்த வீடியோவை தன்னுடைய மகள், பார்க்கும்போது தனக்கு சங்கடமாக உள்ளதாக கங்குலி தெரிவித்திருந்தார். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தன்னுடைய வீட்டில் முடங்கியுள்ள கங்குலி, வீட்டில் சாய்ந்த மாமரத்தை பால்கனியில் இருந்துக்கொண்டு, மீண்டும் அதன் இடத்தில் பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அதிகமாக வலிமை தேவைப்பட்டதாகவும் டிவீட் செய்துள்ளார்.

Sourav Ganguly Star Of Another Balcony, Another Show Of Strength

இந்த டிவீட்டிற்கு வழக்கம் போல ஏராளமான ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் அளித்திருந்தனர். ஒரு ரசிகர் மற்றொரு பால்கனி மற்றும் மற்றொரு வலிமையை காட்டும் செயல் என்று அவரின் முந்தைய கலாட்டாவை கலாய்த்து கமெண்ட் செய்துள்ளார். இதனால் டிவிட்டர் பக்கமே பரபரப்புக்குள்ளானது.

Story first published: Friday, May 22, 2020, 8:06 [IST]
Other articles published on May 22, 2020
English summary
Sourav Ganguly, the former India skipper, has a thing for balconies
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X