For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சவுரவ் கங்குலிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை.. தனிமையில் இருப்பதால் முன்னெச்சரிக்கை!

கொல்கத்தா : பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தன் வீட்டில் முன்னெச்சரிக்கையாக தனிமையில் இருக்கிறார்.

இந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிய வந்துள்ளது.

ஐயா வாங்க, அம்மா வாங்க.. கூவிக்கூவி கூப்பிட்டாலும் யாரும் வரமாட்டேங்கிறாங்களே.. ஐபிஎல் அணிகள் கதறல்!ஐயா வாங்க, அம்மா வாங்க.. கூவிக்கூவி கூப்பிட்டாலும் யாரும் வரமாட்டேங்கிறாங்களே.. ஐபிஎல் அணிகள் கதறல்!

அண்ணனுக்கு பாதிப்பு

அண்ணனுக்கு பாதிப்பு

சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் உள்ள தன் பூர்வீக இல்லத்தில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்கள் முன்பு அவரது அண்ணன் சினேகஷிஷ் கங்குலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் கங்குலியுடன் வசித்து வந்ததால் கங்குலி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

முன்னதாக சினேகஷிஷ் கங்குலியின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. ஒரு மாதம் கழித்து சினேகஷிஷ் கங்குலிக்கும் பாதிப்பு உறுதியானது. பெங்கால் கிரிக்கெட் அமைப்பில் உயர் பொறுப்பில் இருக்கும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

சவுரவ் கங்குலி தன் தாயாருடன் இருக்கும் நிலையில் அவர் முன்னெச்சரிக்கையாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவில் பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. அதனால், ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஐபிஎல்

ஐபிஎல்

தற்போது சவுரவ் கங்குலி வீட்டில் இருந்தபடியே 2020 ஐபிஎல் தொடரை நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். அந்த மெகா கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19 அன்று துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, July 25, 2020, 20:59 [IST]
Other articles published on Jul 25, 2020
English summary
Sourav Ganguly tested negative for COVID-19. Earlier he gave samples as a precautionary mesaure.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X