For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் மட்டுமில்லை.. எதுவுமே விளையாடக் கூடாது.. கங்குலி “பொளேர்” கருத்து!

கொல்கத்தா : காஷ்மீர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா இனி பாகிஸ்தான் நாட்டுடன் எந்த விளையாட்டு ரீதியான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.

கடந்த வாரம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

பாக். வீரர்களுக்கு விசா தராத இந்தியா கூட பேச மாட்டோம்.. சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு அறிவிப்பு! பாக். வீரர்களுக்கு விசா தராத இந்தியா கூட பேச மாட்டோம்.. சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு அறிவிப்பு!

பெருகும் ஆதரவு

பெருகும் ஆதரவு

அந்த தாக்குதலை கண்டித்து இந்தியா, பாகிஸ்தான் நாட்டுடன் கிரிக்கெட் போட்டியில் ஆடக் கூடாது என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. இதை பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கூட ஆதரித்துள்ளனர். ஹர்பஜன் இதை வெளிப்படையாக ஆதரித்து பேசினார்.

கங்குலி கருத்து

கங்குலி கருத்து

அதே போல, கங்குலியும் பாகிஸ்தான் நாட்டுடன் இந்தியா இனி கிரிக்கெட் ஆடக் கூடாது என்ற தன் கருத்தை முன்வைத்தார். வரும் ஜூன் மாதம், உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ள நிலையில் அது குறித்து பேசினார்.

இது பிரச்சனை இல்லை

இது பிரச்சனை இல்லை

"இது 10 நாடுகள் ஆடும் தொடர். இதில் இந்தியா ஒரு போட்டியில் ஆடாவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை என நினைக்கிறேன்" என கூறினார் கங்குலி. உலகக்கோப்பையில் ஜூன் மாதம் 16ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அது நடக்காது

அது நடக்காது

சிலர் இந்தியா, பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடாவிட்டால், இந்திய அணியை உலகக்கோப்பை தொடரில் இருந்து தடை செய்ய முடியும் என கூறி வருகின்றனர். ஆனால், அது நடக்காது என்கிறார் கங்குலி.

ஐசிசிக்கு சிக்கல்

ஐசிசிக்கு சிக்கல்

அது குறித்து பேசிய கங்குலி, "உலகக்கோப்பையில் இந்தியா இல்லாமல் ஐசிசி சமாளிப்பது கடினம். ஐசிசி-யை அப்படி செய்ய வைப்பது கடினம். ஆனால், இந்தியா தன் செய்தியை பலமாக கூற வேண்டும்." என்றார்.

தொடர்பே வேண்டாம்

தொடர்பே வேண்டாம்

மேலும், "இந்த சம்பவத்துக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடக்க வாய்ப்பே இல்லை. இந்தியா கிரிக்கெட் மட்டுமல்லாமல், ஹாக்கி, கால்பந்து என பாகிஸ்தானுடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ள வேண்டும்" என கூறினார்.

Story first published: Friday, February 22, 2019, 15:48 [IST]
Other articles published on Feb 22, 2019
English summary
Sourav Ganguly wants to cut off all sporting ties with Pakistan after Pulwama terror attack.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X