For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"சிறப்பு" டி20 கிரிக்கெட்டுக்கு பிரத்யேக பயிற்சியாளர்.. முக்கிய முடிவுடன் களமிறங்கும் பிசிசிஐ!

மும்பை: இந்திய டி20 அணிக்கென்று பிரத்யேக பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் முடிந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா அணி அடைந்த தோல்வி, ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. தேர்வுக் குழு தொடங்கி, கேப்டன் ரோகித் சர்மா, பிசிசிஐ நிர்வாகம், ஐபிஎல் தொடர் வரை ரசிகர்களின் கோபம் சென்றது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி தோல்விக்கு தேர்வுக் குழுவின் தவறுகளே காரணம் என்று கூறி அனைத்து உறுப்பினர்களையும் பிசிசிஐ அதிரடியாக நீக்கியது.

இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி.. மனம் உடைந்த பாபர் அசாம்.. இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி.. மனம் உடைந்த பாபர் அசாம்..

டி20 உலகக்கோப்பை தோல்வி

டி20 உலகக்கோப்பை தோல்வி

இதனிடையே இந்திய டி20 அணியை புதிதாக கட்டமைக்க வேண்டும் என்றும், அந்த அணிக்கு ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் உள்ளிட்டோர் இனி டி20 போட்டிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் பேசப்பட்டது.

இங்கிலாந்து போல் கட்டமைப்பு

இங்கிலாந்து போல் கட்டமைப்பு

குறிப்பாக இங்கிலாந்து நிர்வாகம் எப்படி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியை கட்டமைத்ததோ, அதேபோல் இந்திய நிர்வாகமும் தனியாக டி20 கிரிக்கெட்டுக்கு என்று கட்டமைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. களத்தில் அச்சமின்றி விளையாடும் இளம் வீரர்கள் கட்டறிந்து பிரத்யேக அணியை உருவாக்குவதே இலக்காக இருக்க வேண்டும் என்று பார்க்கப்பட்டது.

பிசிசிஐ முடிவு

பிசிசிஐ முடிவு

இந்த நிலையில் பிசிசிஐ நிர்வாகிகள் தரப்பில் இந்திய டி20 அணிக்கு என்று பிரத்யேகமாக பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அதேபோல் ஜூனியர் அணிக்கு லக்‌ஷ்மண் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

பிரத்யேக டி20 பயிற்சியாளர்

பிரத்யேக டி20 பயிற்சியாளர்

இதனிடையே ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் வரும் 2023ம் ஆண்டு நடக்க உள்ள உலகக்கோப்பைத் தொடருடன் முடிவுக்கு வருகிறது. இதனால் டி20 கிரிக்கெட் அணிக்கு என்று பிரத்யேக பயிற்சியாளர் நியமித்து, அவரின் செயல்பாடுகளை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் ஈடுபட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, December 6, 2022, 2:33 [IST]
Other articles published on Dec 6, 2022
English summary
BCCI has decided to appoint a special coach for the Indian T20 team after the T20 World Cup Lost
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X