For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மெர்சலான வீரர்களை தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா- இந்திய தொடருக்கான அணி அறிவிப்பு

டர்பன்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

Recommended Video

India vs South Africa தொடருக்கான புதிய அட்டவணை வெளியானது

ஓமைக்கரான் வைரஸ் அச்சுறுத்தலால் இந்த தொடர் நடைபெறுமா என்ற சிக்கல் இருந்தது.

புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்! புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்!

ஆனால் தென்னாப்பிரிக்காவின் கோரிக்கையை ஏற்று தொடரை மாற்றி அமைத்துள்ள பிசிசிஐ, வரும் 26ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

3 ஆண்டுகள்

3 ஆண்டுகள்

இதனிடையே, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான 21 விரர்கள் அடங்கிய தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டை விட்டு விலகி இங்கிலாந்து உள்ளூர் போட்டியில் விளையாடி வந்த வேகப்பந்துவிச்சாளர் டுயானி ஆலிவர், 3 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சாளர்கள்

டின் எல்கர் டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்வார் என்றும் பவுமா துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான தொடரில் ஓய்வில் இருந்த வேகப்பந்துவீச்சாளர்கள் ரபாடா, நோக்கியா ஆகியோர் இந்திய தொடருக்காக திரும்புகின்றனர்.இதே போன்று லுங்கி கிடி, மார்கோ ஜென்சன் என பெரிய வேகப்பந்துவீச்சாளர் பட்டாளமே உள்ளது.

பேட்ஸ்மேன்கள்

பேட்ஸ்மேன்கள்

நிறவெறிக்கு எதிராக மண்டியிட மறுத்த தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக்கும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் களமிறங்குகிறார். ஏய்டன் மார்க்ரம் வென்டர் டூசன் போன்ற இளம் பேட்ஸ்மேன்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர் சிசந்தா, பேட்ஸ்மேன் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் முதல் முறையாக டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணி விவரம்

அணி விவரம்

டின் எல்கார் (கேப்டன்), டெம்பா பவுமா (துணை கேப்டன்) குயின்டன் டி காக் ( விக்கெட் கீப்பர்),ரபாடா,சேரல் எர்வீ,ஹேண்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே,கேசவ் மகாராஜ்,லுங்கி கிடி,ஏய்டன் மார்க்ரம்,வியான் மொல்டர், நோக்கியா,பீட்டர்சன்,வெண்டர் டூசன்,கெயில் வெர்ரையின்,மார்கோ ஜென்சன்,கிளன்டன்,சுபராயின்,சிசந்தா,ரியான், ஆலிவர். கடைசியாக தென்னாப்பிரிக்கா அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2க்கு0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு நெருக்கடி தரும் வகையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்கா அணி தேர்வுக்குழுத் தலைவர் விக்டர் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, December 7, 2021, 17:21 [IST]
Other articles published on Dec 7, 2021
English summary
South Africa announced 21 Member Squad for India series. Dean Elgar to Lead the team. Oliver Made a comeback to SA Team after 3 Years. Star Bowlers also selected for the India series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X