பத்தே பந்து 3 விக்கெட்.. தென்னாப்பிரிக்கா அசுர வேக பந்துவீச்சு.. சிக்கி சின்னா பின்னமான இங்கிலாந்து

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

Recommended Video

IND vs PAK போட்டி குறித்து Rohit Sharma தரமான விளக்கம்

இதனை அடுத்து இங்கிலாந்து அணி தனது பேட்டிங்கில களமிறங்கியது. தென்னாப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராலி ,ஜோ ரூட் ஆகியோர் ஒற்றை எலக்கம் ரன்களில் ஆட்டம் இழக்க, ஜானி பாரிஸ்டோ டக் அவுட் ஆனார்.

165 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

165 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இங்கிலாந்து அணியில் ஆலிவ் போப் மட்டும் பொறுப்புடன் விளையாடி 73 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதில் தென் ஆப்பிரிக்கா வீரர் ரபாடா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.இதனை அடுத்து தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியது கேப்டன் டீன் எல்கார் 47 ரன்களில் வெளியேற சாரல் பொறுப்புடன் விளையாடி 73 ரன்கள் சேர்த்தார்.

326 ரன்கள்

326 ரன்கள்

அதன் பின்னர் கீகன் பீட்டர்சன் ,எய்டன் மார்க்ரம், வெண்டர் டுசன் ஆகியோர் தொடக்கங்களை கொடுத்தாலும் அதனை பெரிய ஸ்கோர் ஆக மாற்றாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.இறுதியில் யான்சன் 48 நாட்களும், கேசவ் மகாராஜ் 41 ரன்களும் எடுக்க தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

161 ரன்கள் முன்னிலை

161 ரன்கள் முன்னிலை

161 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸ் 35 ரன்களும், ஜாக் கிராலி 13 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி அணிவகுப்பு நடத்தினர். போப் ஐந்து ரன்களிலும் ஜோ ரூட் 6 ன்களிலும் ஆட்டமிழந்ததனர்.

இன்னிங்ஸ் தோல்வி

இன்னிங்ஸ் தோல்வி

குறிப்பாக தென்னாப்பிரிக்கா வீரர் நோக்கியா வீசிய 10 பந்துகளில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தது.இதனால் இங்கிலாந்த அணி 31 ஓவர் முடிவில் 112 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.நோக்கியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்த அணி திணறியது. அந்த அணி 2வது இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
South Africa beat England by an innings and takes a lead 1-0 பத்தே பந்து 3 விக்கெட்.. தென்னாப்பிரிக்கா அசுர வேக பந்துவீச்சு.. சிக்கி சின்னா பின்னமான இங்கிலாந்து
Story first published: Friday, August 19, 2022, 21:27 [IST]
Other articles published on Aug 19, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X