For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாக்.குடன் 2வது போட்டியில் மழை.. டக்வொர்த் லீவிஸ் முறை.. 2வது பேட் செய்த தென்ஆப்பிரிக்கா வெற்றி

செஞ்சூரியன்:பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த இரு போட்டிகளில் 1-1 என இரு அணிகளும் சம நிலை வகித்தன.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சமான் 2 ரன்னில் அவுட்

சமான் 2 ரன்னில் அவுட்

தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹக், பகர் சமான் ஆகியோர் களமிறங்கினர். பகர் சமான் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய பாபர் அசாம் இமால் அல் ஹக்குடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 132 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை வலுவாக்கினர். பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த பாபர் அசாம் 69 ரன்னில் வெளியேறினார்.

அரைசதமடித்த உல் ஹக்

அரைசதமடித்த உல் ஹக்

அடுத்து இறங்கிய மொகமது ஹபீசும் 52 ரன்னில் அவுட்டானார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் இமாம் உல் ஹக் நிலைத்து நின்று ஆடி 5வது சதத்தை பதிவுசெய்தார். அவர் 116 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் இமாத் வாசிம் அதிரடியாக புகுந்து விளையாட... பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. வாசிம் 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

317 ரன்கள் குவிப்பு

317 ரன்கள் குவிப்பு

முடிவில். பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்தது. தென்ஆப்பிரிக்கா சார்பில் ஸ்டெயின், ரபடா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி, தமது ஆட்டத்தை தொடர்ந்தது.

தொடங்கிய தென்ஆப்பிரிக்கா

தொடங்கிய தென்ஆப்பிரிக்கா

தொடக்க ஆட்டக்காரர்களாக காக்கும், அம்லாவும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக பாகிஸ்தான் பந்தை எதிர்கொண்டனர். ஸ்கோர் 53 ரன்களை எட்டிய போது அம்லா ஹசன் அலி பந்தில் அசாமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதையடுத்து,ஹென்ட்ரிக்ஸ் காக்குடன் கரம் கோர்த்தார். அணியில் மேலும் 26 ரன்கள் சேர்ப்பதற்குள் காக் ஆட்டமிழந்தார்.

அதிரடியான ஆட்டம்

அதிரடியான ஆட்டம்

பின்னர் கேப்டன் டுபிளிசிஸ் களமிறங்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 3வது விக்கெட்டுக்கு இருவரும் 54 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தனர். 26வது ஓவரில் தென்ஆப்பிரிக்க அணியானது 150 ரன்களை கடந்தது. 96 பந்துகளில் 100 ரன்களை அந்தஅணி எட்டியது.

வந்தது மழை

வந்தது மழை

அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களாக இருந்தபோது மழை குறுக்கிட்டது. அதனால் ஆட்டம் தடைபட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, போட்டியின் முடிவை டக்வொர்த் லீவிஸ் விதிப்படி அறிவித்தனர். அதன்படி.. 33 ஓவர்களில் தென்ஆப்பிரிக்கா அணி 175 ரன்கள் என்று கணக்கிடப்பட்டது.

வென்றது தென்ஆப்பிரிக்கா

வென்றது தென்ஆப்பிரிக்கா

ஆனால்... தென்ஆப்பிரிக்கா அணி 187 ரன்கள் குவித்திருந்தது. இதையடுத்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. இதன்மூலம் தென்ஆப்பிரிக்க அணி தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Story first published: Saturday, January 26, 2019, 12:09 [IST]
Other articles published on Jan 26, 2019
English summary
South Africa beat Pakistan by 13 runs via the Duckworth-Lewis method in Centurion to take a 2-1 lead in the five-match series of one-day internationals.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X