For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்கெல்லாம் யாரு... ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்த தென்னாப்பிரிக்கா

போட்செப்ஸ்டோர்ம் : தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 3 போட்டிகளை கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டு தென்னாப்பிரிக்கா தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்செப்ஸ்டோமில் நடைபெற்ற 3வது மற்றும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே சதமடித்த நிலையில், அது வீணானது.

South Africa Clinch ODI Series 3-0 Against Australia

தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஸ்மட்ஸ், இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்தார். 42 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், 98 பந்துகளுக்கு 84 ரன்களையும் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி, அந்த அணியுடன் விளையாடிய 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் மோதியது. இதில் தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

இந்த தொடரின் இறுதிப்போட்டி போட்செப்ஸ்டோர்மில் நடைபெற்ற நிலையில், இதில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிக் கொண்டுள்ளது. மீதம் 4.3 ஓவர்கள் இருந்தநிலையில் இந்த வெற்றியை தென்னாப்பிரிக்கா சாத்தியப்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை 3வது முறையாக தென்னாப்பிரிக்கா வெற்றி கொண்டுள்ளது.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக விளையாடி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்களை குவித்தனர். அணியின் இளம்வீரர் மார்னஸ் லாபுசாக்னே, சதமடித்தார். ஆயினும் அவரது இந்த முயற்சி வீணானது. அணியின் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய வீரர்கள், முதல் 15 ஓவர்களுக்குள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆனால் டி'ஆர்சி ஷார்ட், லாபுசாக்னேவிற்கு ஈடுகொடுத்து விளையாடி ரன் உயர்வுக்கு காரணமானார். ஆனால் ஸ்மட்சின் பந்துவீச்சில் அவர் 36 ரன்களுக்கு வெளியேறினார். இந்த போட்டியின் இறுதிவரை தொடர்ந்து ஸ்ட்ராங்காக இருந்து விளையாடிய லாபுசாக்னே, இறுதி ஓவரில் அன்ரிட்ச் நார்ட்ஜேவின் பந்துவீச்சில் அவுட்டானார்.

அடுத்ததாக களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் குவின்டன் டி காக் மற்றும் ஜானேமான் மாலன் ஆகியோர் முதல் 11 ஓவர்களில் சொற்ப ரன்களில் வெளியேற, ஜேஜே ஸ்மட்ஸ் மற்றும் கைல் வெரேனே இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 96 ரன்களை குவித்தனர். ஸ்மட்ஸ், 98 பந்துகளுக்கு 84 ரன்களை குவித்தார். வெரேனே 50 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து கிளாசென் மற்றும் ஸ்மட்ஸ் அடுத்ததாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். தொடர்ந்து ஸ்மட்ஸ் 43வது ஓவரில் ஆட்டமிழக்க, கிளாசென், அணியை முன்னெடுத்து வெற்றியை கைவசப்படுத்தினார்.

Story first published: Sunday, March 8, 2020, 11:53 [IST]
Other articles published on Mar 8, 2020
English summary
South Africa coasted to a six-wicket win with 4.3 overs to spare
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X