தென்னாப்பிரிக்கா 9 ரன்களுக்கு 5 விக்கெட்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்.. அனல் பறந்த இந்திய பந்துவீச்சு

திருவனந்தப்புரம் : இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

Recommended Video

IND vs SA போட்டியில் South Africa அணியை திணறடித்த India Bowling *Cricket

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. இதன் காரணமாக இறுதிப் போட்டிக்கு கூட தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அக்சர் பட்டேல், சாஹல் போன்ற சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர்.

டி20 உலககோப்பையில் பும்ரா சந்தேகம்.. ரோகித் சொன்ன பதில்.. தெ.ஆப்பிரிக்கா ஆட்டத்தில் ஏன் இல்லைடி20 உலககோப்பையில் பும்ரா சந்தேகம்.. ரோகித் சொன்ன பதில்.. தெ.ஆப்பிரிக்கா ஆட்டத்தில் ஏன் இல்லை

சீனியர்கள் இல்லை

சீனியர்கள் இல்லை

இதனால் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சும் ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. பும்ரா திரும்பியும், ஆஸ்திரேலிய அணி பவர்பிளேவில் பேய் அடி அடித்து ரன்களை குவித்தது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

தீபக் சாஹர்

தீபக் சாஹர்

இந்த நிலையில், பும்ராவும் இல்லாத நிலையில், ஆர்ஸ்தீப் சிங் மற்றும் சிஎஸ்கே வீரர் தீபக் சாஹரும் புது பந்தில் ஓவர்களை இரு முனையிலும் வீசினர். தீபக் சாஹர் வழக்கம் போல் பந்துகளை அவுட் ஸ்விங் செய்து தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு நெருக்கடி அளித்தார். இந்த நிலையில் கடைசி பந்தில் ஒரு இன் ஸ்விங் வீச, அது பெவுமா ஸ்டம்பை பதம் பார்த்தது.

3 விக்கெட்

3 விக்கெட்

இதனையடுத்து ஆர்ஸ்தீப் சிங் 2வது ஓவரை வீசினார். 2வது பந்தில் குயின்டன் டி காக் பந்தை அடிக்க முயன்ற போது அது பேட்டில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனையடுத்து ஆர்ஸ்தீப் சிங் அனல் பறக்க பந்துகளை வீச அதனை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறினர். 2வது ஓவரின் 5வது பந்தில் ரூசோவ் ரிஷப் பண்டிடம் கேட்ச் ஆனார்.

தடுமாறும் தென்னாப்பிரிக்கா

தடுமாறும் தென்னாப்பிரிக்கா

இதே போன்று கடைசி பந்தில் அதிரடி டேவிட் மில்லர் கிளின் போல்ட் ஆனார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 9 ரன்கள் சேர்ப்பதற்குள் அணியின் பாதி பேர் பெவிலியனுக்கு சென்றுவிட்டனர். முன்னணி பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாத நிலையில், தென்னாப்பிரிக்க அணி அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. தற்போது ஹர்சல் பட்டேல் தென்னாப்பிரிக்க அணியின் 6வது விக்கெட்டை கைப்பற்றினார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
South Africa lost 5 wickets by scoring 9 runs vs india in 1st t20i தென்னாப்பிரிக்கா 9 ரன்களுக்கு 5 விக்கெட்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்.. அனல் பறந்த இந்திய பந்துவீச்சு
Story first published: Wednesday, September 28, 2022, 20:57 [IST]
Other articles published on Sep 28, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X