For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“குயிண்டன் டிகாக்கின் மோசமான மறுபக்கம்”.. கிளம்பிய இனவெறி சர்ச்சை.. அணியில் இருந்து அதிரடி நீக்கம்!

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் இன வெறி சர்ச்சையில் சிக்கியுள்ள தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டிகாக்கை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டி20 உலக கோப்பைக்கு இந்த 8 ஐபிஎல் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. பலன் தருமாடி20 உலக கோப்பைக்கு இந்த 8 ஐபிஎல் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. பலன் தருமா

இந்த தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.

 தென்னாப்பிரிக்க அணி

தென்னாப்பிரிக்க அணி

இரு அணிகளும் மோதும் போட்டி துபாயில் மாலை 3:30 மணிக்கு தொடங்கியது. ஆனால் போட்டி தொடங்கியபோதே மிகப்பெரும் சர்ச்சை ஒன்று வெடித்தது. டாஸ் வென்ற தென்னாப்பிர்க்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இரு அணிகளும் ப்ளேயிங் 11-ம் அறிவிக்கப்பட்டன. ஆனால் தென்னாப்பிரிக்க அணியின் ப்ளேயிங் 11 திடீரென மாற்றப்பட்டது.

 கருப்பின மக்களுக்கு ஆதரவு

கருப்பின மக்களுக்கு ஆதரவு

ஒவ்வொரு லீக் போட்டிக்கு முன்பும் கிரிக்கெட் வீரர்கள் கறுப்பினத்தவருக்கு ஆதவராக, முழங்கால் இட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியில்கூட இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் மண்டியிட்டு முன்னெடுப்பு எடுத்தனர். அந்தவகையில், தென்னாப்பிரிக்க மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான போட்டி தொடங்குவதற்கு முன்பும், வீரர்கள் முழங்கால் இட்டு கறுப்பின மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

டி காகின் செயல்

டி காகின் செயல்

ஆனால் அப்போது, தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக், முழங்கால் இட மறுத்து நின்றுகொண்டிருந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.

நடவடிக்கை

நடவடிக்கை

ஆட்டம் தொடங்குவதற்குள் அணியின் ப்ளேயிங் 11 மாற்றப்பட்டது. குயிண்டன் டிகாக் ப்ளேயிங் XI-ல் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதில் விக்கெட் கீப்பராக ஹென்ட்ரிக் கிளாஸின் சேர்க்கப்பட்டார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் கறுப்பின பாகுபாடு பார்க்கப்படுவதாக பலமுறை புகார் எழுந்திருக்கிறது. தற்போது அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Story first published: Tuesday, October 26, 2021, 20:07 [IST]
Other articles published on Oct 26, 2021
English summary
South africa player Quinton De Kock Not Playing Against West Indies after his Stand On The BLM Movement
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X