“அடுத்த ஏ.பி.டிவில்லியர்ஸ் ரெடி!!.. அதுவும் தென்னாப்பிரிக்காவில்”.. வலைவிரிக்கும் ஆர்சிபி? - வீடியோ

வெஸ்ட் இண்டீஸ்: அதிரடி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸின் ஸ்டைலிலேயே பேட்டிங் செய்யக்கூடிய இளம் வீரரை ரசிகர்கள் கண்டறிந்துள்ளனர். அதுவும் தென்னாப்பிரிக்காவுக்காகவே அவர் விளையாடி வருகிறார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்..? போட்டியில் 4 வீரர்கள்..!! பி.சி.சி.ஐ. அவசர ஆலோசனைஇந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்..? போட்டியில் 4 வீரர்கள்..!! பி.சி.சி.ஐ. அவசர ஆலோசனை

இதில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நேற்று தென்னாப்பிரிக்காவை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.

டேவல்ட் ப்ரேவிஸ்

டேவல்ட் ப்ரேவிஸ்

இந்த போட்டியில் இந்திய அணி வீரர் யாஷ் துல் உடைய 82 ரன்கள் மற்றும் விக்கி ஒஸ்ட்வாலின் 5 விக்கெட்டுகள் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் இந்தியாவை விட தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் டேவல்ட் ப்ரேவிஸ் என்பவர் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். இதற்கு காரணம் ஏ.பி.டிவில்லியர்ஸ் தான்.

குட்டி ஏபி டிவில்லியர்ஸ்

தென்னாப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்த போது அதிரடி அரைசதம் அடித்து காப்பாற்றினார் டேவல்ட் ப்ரேவிஸ். ஆனால் அவரின் ஷாட்கள் மற்றும் சிக்ஸர்கள் அடித்த விதம், முன்னாள் வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸை நினைவுப்படுத்தியது. குறிப்பாக சிக்ஸர் அடிப்பதற்கு முன்பு டிவில்லியர்ஸ் தனது இடதுகாலை முன்பு பகுதிக்கு நகற்றுவார். அதனை அச்சு அசலாக அப்படியே செய்திருந்தார் ப்ரேவிஸ்.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

முதலில் நிதானமாக விளையாடிய அவர், அதன்பின்னர் ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் 99 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார் இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ப்ரேவிஸ் அரைசதமடித்த பிறகு, சக அணி வீரர்களே, அவருக்காக "குட்டி ஏ.பி.டிவில்லியர்ஸ் " என பலகையில் எழுதி காண்பித்தனர். இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஐபிஎல் மெகா ஏலம்

இது ஒருபுறம் இருக்க, ப்ரேவிஸ் சிக்ஸர் அடிக்கும் பழைய வீடியோக்களையும் ரசிகர்கள் டிவில்லியர்ஸ் பேட்டிங்குடன் ஒப்பிட்டு இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரையும் களமிறக்க பல அணிகள் முயற்சி மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
The Under-19 World Cup cricket series is in full swing. In this case, the fans have found a young player who can bat in the style of action player AB de Villiers. That too he is playing for South Africa.
Story first published: Monday, January 17, 2022, 16:13 [IST]
Other articles published on Jan 17, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X