For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WTC Final: போச்சு.. "அந்தர்பல்டி" பிளான்.. தாறுமாறு பிட்ச் ரெடி.. இந்தியாவுக்கு செக்

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியா என்றுமே விரும்பாத பிட்ச் தயார் செய்யப்படுகிறதாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் எனும் ரசிகர்களுக்கான கிரிக்கெட் ஃபுல் மீல்ஸ், வரும் வெள்ளிக்கிழமை (ஜூன்.18) முதல் தொடங்கவிருக்கிறது.

WTC Final IND vs NZ: பரபரக்கும் ஃபைனல்.. மேட்ச் எத்தனை மணிக்கு? எந்த சேனலில் பார்க்கலாம்? WTC Final IND vs NZ: பரபரக்கும் ஃபைனல்.. மேட்ச் எத்தனை மணிக்கு? எந்த சேனலில் பார்க்கலாம்?

விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு பயிற்சிப் போட்டிகள் இல்லையென்றாலும், அட்லீஸ்ட் மனதுக்கு ஆறுதல் தரும் விதமாக, இன்ட்ரா ஸ்குவாட் கிரிக்கெட்டிலாவது இந்திய அணி விளையாடி வருகிறது.

கம்பீர் அன்று சொன்னது

கம்பீர் அன்று சொன்னது

சரி.. விஷயத்துக்கு வருவோம். "எங்க ஊருக்கு வாடா.. அங்க வச்சு அடிக்கிறோம்" என்று 2011ல் இந்தியா அணி இங்கிலாந்து சென்றிருந்த போது, கவுதம் கம்பீர் வேதனையோடு கூறியிருந்தார். அவ்வளவு அடி அந்த தொடரில் இந்தியாவுக்கு. விளையாடிய ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி. ஒயிட் வாஷ் ஆனது இந்தியா. அப்போது, கம்பீர் கூறிய வார்த்தை இப்போது நினைவுக்கு வருகிறது.

பேட்ஸ்மேன்கள் நரகம்

பேட்ஸ்மேன்கள் நரகம்

அதேபோல், இந்த வருட தொடக்கத்தில் இந்தியா வந்திருந்த இங்கிலாந்து, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 - 1 என்று அடி வாங்கியதோடு மட்டுமில்லாமல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டியிலும் விளையாடும் வாய்ப்பை இழந்தது. அதுவும், கடைசி மூன்று போட்டிகளில், ஸ்பின் டிராக் செட் செய்த இந்திய அணி, இங்கிலாந்தை திணற திணற அடித்தது. "பேட்ஸ்மேன்கள் நரகம்" என்றால் அது அந்த கடைசி மூன்று டெஸ்ட் மேட்ச் தான். அதிலும், நரேந்திர மோடி ஸ்டேடியம்-லாம் "வேற லெவல்".

தாறுமாறு பிட்ச்

தாறுமாறு பிட்ச்

பலத்த அடியால் நொந்து போன இங்கிலாந்து, 'அடுத்து எங்க ஊருக்கு தானே வருவீங்க.. வாங்க, வச்சு செய்யுறோம்' என்று சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றது. அப்படியொரு Pace and Bounce பிட்ச் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டிக்கு ஏற்ப தயார் செய்யப்படுகிறதாம். பிட்சின் கியூரேட்டர் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர், "வானிலை நமக்கு பெரும்பாலான நேரங்களில் உதவாது. ஆனால், வெப்பம் நன்றாக இருக்கிறது. எனவே வேகப்பந்துவீச்சுக்கு இந்த பிட்ச் உதவலாம். தனிப்பட்ட முறையில், இந்த இறுதிப் போட்டி நடக்கும் சவுத்தாம்ப்டன் பிட்ச்சில் வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

சோதனை மேல் சோதனை

சோதனை மேல் சோதனை

அதுசரி.. இங்கிலாந்து விளையாடும் போது தானே பழிவாங்கணும். இங்க மேட்ச் நியூஸிலாந்தோடு தானே. லாஜிக் மிஸ்ஸாகுதே? என்ற கேட்போருக்கான பதில், மேட்ச் இங்கிலாந்துல தான நடக்குது!?.. ஸோ, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தே இந்தியாவுக்கு சோதனை கொடுக்க தயாராகிவிட்டது இங்கிலாந்து. அப்போ ரணகளமான மேட்ச் உறுதி!

Story first published: Monday, June 14, 2021, 16:50 [IST]
Other articles published on Jun 14, 2021
English summary
Southampton curator reveals pitch report WTC Final - செம
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X