இந்திய வீரர்களுக்கு ஆஸி.யில் வழங்கப்படும் உணவு.. அட்டகாச காட்சியை வெளியிட்ட ரோகித்.. சான்சே இல்ல

பெர்த் : டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று அடைந்துள்ளது.

பெர்த் நகரில் வந்து இறங்கி உள்ள இந்திய அணி அங்கு உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணி நாளைய முதல் கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சியில் களம் இறங்க உள்ளது.

இவரையா டி20 உலககோப்பையில் சேர்க்கல.. சஞ்சு சாம்சனுக்காக களமிறங்கும் ரசிகர்கள்.. யாருக்கு பதில் ?இவரையா டி20 உலககோப்பையில் சேர்க்கல.. சஞ்சு சாம்சனுக்காக களமிறங்கும் ரசிகர்கள்.. யாருக்கு பதில் ?

இயற்கை காட்சி

இயற்கை காட்சி

இந்திய அணி தங்கி இருக்கும் ஹோட்டலில் இருந்து வெளியே பார்த்தால் பெர்த் நகரின் அழகிய தோற்றம் தெரிகிறது. காண்போரை கவர செய்யும் காட்சியை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய அணி இங்கு தான் வரும் 15ஆம் தேதி வரை தங்க உள்ளது.

சிறப்பு வசதிகள்

சிறப்பு வசதிகள்

இந்த ஹோட்டலில் ஜிம் வசதி , நீச்சல் குளம் வசதி ,போட்டி குறித்து ஆலோசனை செய்வதற்கான கூடம், மினி திரையரங்கம், ஸ்னூக்கர் விளையாடும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய வீரர்களுக்காக சைவம் மற்றும் அசைவ வகை உணவுகளை தயாரிக்க ஹோட்டல் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

உணவு பட்டியல்

உணவு பட்டியல்

அதன்படி சுண்டல்,தானிய வகை உணவுகள் மற்றும் ஆட்டு இறைச்சி அடங்கிய உணவு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிறந்த இந்திய சமையல் வல்லுநர் இந்திய அணியின் உணவு வகையை செய்ய உள்ளார். இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு டயட் பட்டியலை வழங்கி இருக்கிறது. அதனை ஹோட்டல் நிர்வாகம் செய்ய உள்ளது.

ரசிகர்களுக்காக இந்திய உணவு

ரசிகர்களுக்காக இந்திய உணவு

இதனிடையே இந்திய அணி வரும் பத்தாம் தேதி மற்றும் பன்னிரண்டாம் தேதி பெர்த் மைதானத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இந்தப் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய ரசிகர்கள் நிறைய பேர் வருவார்கள் என்பதால் அவர்களை கவர சமோசா,சுண்டல், பிரெஞ்ச் ப்ரைஸ் உள்ளிட்ட உணவு பொருட்கள் மைதானத்தில் விற்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
spectacular view for Indian team and food recipe for players and fans
Story first published: Friday, October 7, 2022, 17:01 [IST]
Other articles published on Oct 7, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X