For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சத்தியமா சொல்றேன், இம்புட்டுப் பணத்தை நான் பார்த்ததே இல்லை... 3.3. கோடிக்கு ஏலம் போன மோரிஸ்!

ஜோஹன்னஸ்பர்க்: எனது வாழ்க்கையில் இப்படி ஒரு பணத்தை நான் பார்த்ததே இல்லை சற்றே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் கூறியுள்ளார் தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ்.

சென்னையில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் மோரிஸ் ரூ.3.3 கோடிக்கு ஏலம் போனார். அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இவரை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகியவை கடுமையாக மோதின. ஆனால் சென்னை தட்டிச் சென்று விட்டது.

தன்னை ரூ. 3.3 கோடிக்கு ஏலம் எடுத்தது ஆச்சரியமாக இருப்பதாக கூறியுள்ளார் மோரிஸ்.

ஆல்ரவுண்டர் மோரிஸ்

ஆல்ரவுண்டர் மோரிஸ்

மோரிஸ் ஒரு பக்கா ஆல்ரவுண்டர் ஆவார். தென் ஆப்பிரிக்க அணியின் அசைக்க முடியாத வீரராக இருப்பவர்.

37 வீரர்களில் ஒருவர்

37 வீரர்களில் ஒருவர்

மொத்தம் 108 வீரர்கள் ஏலம் விடப்பட்டதில் 37 பேர் மட்டுமே விலை போயினர். அதில் மோரிஸும் ஒருவர்.

ஐபேடில் நேரடியாக பார்த்தார்

ஐபேடில் நேரடியாக பார்த்தார்

ஐபிஎல் ஏலத்தை மோரிஸ் தனது ஐபாட் மூலம் நேரடியாகப் பார்த்து ரசித்தாராம். அதில் புழங்கிய பணமும், விலை போன வீரர்களை ஏலம் எடுத்த தொகையும் அவரை அதிரவும், ஆச்சரியப்படவும் வைத்து விட்டதாம்.

நம்பவே முடியலை...

நம்பவே முடியலை...

எனது வாழ்க்கையில் இப்படி ஒரு பணத்தை நான் பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு ஐபிஎல்லில் பணம் புழங்குகிறது. இது ஆச்சரியமாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்றே எனக்கும், என்னுடன் ஏலத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நீல் மெக்கன்சிக்கும் புரியவே இல்லை...

எப்படிச் செலவழிப்பது என்றும் தெரியவில்லை...

எப்படிச் செலவழிப்பது என்றும் தெரியவில்லை...

இவ்வளவு பணத்தை வைத்து நான் எப்படிச் செலவழிப்பேன் என்றும் தெரியவில்லை. ரொம்ப குழப்பமாக இருக்கிறது.எங்க அப்பா அம்மாவிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விடுவேன். கொஞ்சத்தை செலவழித்து விடுவேன்... மிச்சத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூறி சிரிக்கிறார் மோரிஸ்.

டுவென்டி 20 கிரிக்கெட்டில் பந்து வீச்சுப் புலி

டுவென்டி 20 கிரிக்கெட்டில் பந்து வீச்சுப் புலி

மோரிஸ், தென் ஆப்பிரிக்க டுவென்டி 20 போட்டிகளில் கலக்கி வருபவர். குறிப்பாக பந்து வீச்சில் கில்லாடியாக இருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் அவர்தான் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்தான், மோரிஸின் திறமையை அறிந்து அவரை குறி வைத்து தூக்கியுள்ளார்.

Story first published: Monday, February 4, 2013, 17:47 [IST]
Other articles published on Feb 4, 2013
English summary
The bidding war that his name triggered at the IPL players auction left Chris Morris' head spinning and the South African all-rounder conceded that he has never seen the kind of money he would now be drawing.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X