For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷேவாக் நிலைமை கவலை தருகிறது, ஆனாலும் மீண்டு வருவார் - கிரண் மோரே

Virender Sehwag
மும்பை: இந்தியாவின் அற்புதமான தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக். தற்போது அவர் தடுமாறி வருகிறார். இருப்பினும் மீண்டும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தைக் காட்டுவார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் அணித் தேர்வாளர் கிரண் மோரே.

இதுகுறித்து அவர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், வீரேந்திர ஷேவாக் இந்தியாவுக்குக் கிடைத்த அருமையான தொடக்க ஆட்டக்காரர். சிறந்த வீரரும் கூட. மிகச் சிறந்த ஆட்டக்காரர். தற்போது அவரது ஆட்டம் சிறப்பாக இல்லை. தடுமாறிக் கொண்டிருக்கிறார். கவலை தரும் வகையில்தான் அவரது ஆட்டம் உள்ளது. இருப்பினும் அவர் மீண்டு வருவார்.

ஆஸ்திரேலியத் தொடரில் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். அதேபோல கெளதம் கம்பீரும் மீண்டும் சிறந்த ஆட்டத்திற்குத் திரும்ப முடியும். அஜிங்கியா ரஹானேவும் தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறார். ஷிகார் தவனும் காத்திருக்கிறார். இளைஞர்களுக்கு நாம் போதிய வாய்ப்பு தர வேண்டும்.

ஒவ்வொரு வீரருக்கும் வரும் பிரச்சினைதான் தற்போது ஷேவாக்குக்கும் வந்துள்ளது. எனக்கும் கூட வந்துள்ளது. இருப்பினும் ஷேவாக் போன்ற வீரர்களுக்கு இது பெரிய பிரச்சின இல்லை. எளிதாக மீண்டு விடலாம் என்றார் மோரே.

Story first published: Wednesday, March 6, 2013, 10:41 [IST]
Other articles published on Mar 6, 2013
English summary
Former India selector Kiran More on Monday (March 4) said the form of under-performing senior opening batsman Virender Sehwag was a cause for concern and the selectors may be inclined to give others a chance in the remainder of the Border-Gavaskar series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X